முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 28, 2015

மீண்டும் முதல்வராக வேண்டுமென்ற ஆசை இல்லை - மு.க

No comments :
திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் பிறந்தநாள், இளைஞர் எழிச்சி நாளாக சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "இங்கே வழங்கப்பட்டுள்ள 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் முழுமையாக ஏழை, எளிய சாமானிய மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் இருக்க வேண்டுமென்பதற்காக வழங்கப்பட்டுள்ளது.  இப்பொருட்களை பெறுகின்ற மக்களின் வாழ்த்துக்கள் தம்பி ஸ்டாலின் வயதை இன்னும் 10, 20 வருடங்களுக்கு கூடுதலாக்கும் என்று நம்புகிறேன். 


இங்கு பேசியவர்கள் நான் மீண்டும் 6வது முறையாக முதல்வராக வர வேண்டுமென சொன்னார்கள். எனக்கு மீண்டும் முதல்வராக வேண்டுமென்ற ஆசை இல்லை. திமுகவை கட்டி காக்க வேண்டும். கடைசி தொண்டன் இருக்கும் வரை இக்கழகத்தி எதிரிகளுக்கு விட்டு கொடுக்க முடியாது. வாடி வதங்கி இருக்கும் ஏழை, எளிய தொண்டர்களுக்கு இந்த கழகத்தை விட்டால் வேறு வழியில்லை என்பதனை உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார். 

இவ்விழாவில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான நல உதவித் திட்டங்கள் 20 ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொண்டி அல் ஹிலாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விழா

No comments :
தொண்டி அல் ஹிலாள் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் கமால்பாட்ஷா தலைமை வகித்தார்.

Image result for celebration clip art
இதில் சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி, மதுரை சாராசென்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் முகம்மது பைரோஸ், அல் ஜின்னா இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் ஜபார் நைனா முகம்மது ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
தொண்டி பேரூராட்சி தலைவர் சேகுநைனா, தொண்டி செய்யது முகம்மது அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பியாட்றல் அன்னா ஜாய் ஆகியோர் விûளாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினர்.

பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ராமேசுவரம் கோயில் பிப்ரவரி மாத வருவாய் ரூ.71 லட்சம்

No comments :
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்னும் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

பிப்ரவரி மாதத்துக்கான உண்டியல் எண்னும் பணி வெள்ளிக்கிழமை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் வெளிநாட்டு பணம் உள்பட 71 லட்சத்து 44 ஆயிரத்து 113 ரூபாயும், 85 கிராம் தங்கமும், 5 கிலோ 950 கிராம் வெள்ளியும் இருந்தன.


உண்டியல் எண்னும் பணியில் திருக்கோயிலின் மேலாளர் லெட்சுமி மாலா, கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், ககாரின் ராஜ், முதுநிலை கணக்கீட்டாளர் சண்முகநாதன்,ஆலய பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை, இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் மற்றும் பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், இந்தியன் வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி: தினமணி

இன்று, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா - கீழக்கரை புரவலர் திரு. சலாஹுத்தீன் பங்கேற்கிறார்

No comments :

தகவல்: திரு ஹமீது ரஹ்மான்

துபாய் ETA வில் மேலாளர் பணி வாய்ப்பு

No comments :

The Role

To provide a professional and effective strategic MEP operation & maintenance service to the engineering department.

Overall responsible for the MEP maintenance operations in the region.

Primary Responsibilities:
- Develop a first-class service to support complex, multi-disciplined sites and the requirements of the client.
- Prepare business plans and forecasting budgets, as required. Ensure all budgets and costs for contracts accurately reflect contractual obligations, offer value for money for clients and provide optimum revenue.
- Ensure that operational activities meet and integrate with the organizational requirements for HSEQ, legal and statutory requirements and general duty of care.
- Identify, develop, implement and review MEP technical based solutions that clearly demonstrate added value to the clients requirements.
- Maintain strategic overview on service progress, from a commercial and technical perspective.
- Maximise the life cycle of the contract by aligning the team with the business drivers of the client.
- Implement a culture of continuous improvement and best practice strategies to ensure a consistently high level of service delivery, response times and contract compliance.
- Develop and maintain standard operating procedures, contingency plans, emergency response procedures, preventive maintenance programmes and all technical documentation.
- Develop and maintain strong and supportive relationships with clients, service providers and third-parties.
- Foster and develop beneficial partnerships by attending monthly review meetings. Develop and nurture relationships with key clients and contractual service delivery requirements.
- Ensure that corporate policies and procedures are strictly adhered to, in order to maintain the integrity of the operational activities.
- Develop and prepare all periodic progress, engineering and management reports, as required.
- Processes, Systems and Procedures
- Produce procedures and processes to underpin SLA's, KPI's, EFS group standards, plus any additional statements specific to needs of the client.
- Consistently monitor processes, systems and procedures to maintain optimum customer service, efficiency and accuracy.

Leadership and Management
- Develop, lead, motivate and inspire a professional team enabling them to meet both personal and business targets. Provide clear operational direction and support to team.
- Monitor and evaluate performance levels of employees. Proactively identify opportunities to improve performance Indicators.
- Strong teamwork ethic and promotion of customer service excellence.
- Demonstrate leadership and management skills. Able to drive change management and reduce costs.
- Proactively manage and take ownership of issues. Seek equitable and creative solutions to problems.
- Agree and review performance objectives for each team member. Carry out annual reviews. Use the process to improve employees who are not meeting requirements of role.
- Encourage employees to support the operational business objectives by sharing knowledge and to develop a creative approach to their work and to think outside the box.

HSEQ
- Management of HSEQ practices and policies.
- Ensure compliance with all legal obligations and regulations.

Requirements

- Minimum of 10-15 years of experience (Degree in Mechanical engineering having experience mainly in HVAC projects & maintenance) in a MEP operation & maintenance environment with experience of technically complex and multi-disciplined sites.
- Significant management experience with strategic and budgetary responsibility gained within a major organisation. Strong commercial mindset and financially fluent.
- Excellent time management skills and able work to strict deadlines.

Job Knowledge & Skills
- Provide high level of customer service to both internal and external customers. Prompt response to queries in writing or by telephone.
- Effective organiser and implementer. Ability to provide a high standard of administrative support. Able to implement administrative processes and pro-actively resolve problems.
- Motivational and ambitious leader with the ability to drive change in business and performance management processes.
- Excellent influencing, interpersonal and communication skills. Strong and professional presentation, written and verbal skills.
- Takes ownership of issues. Seeks equitable and creative solutions to problems. Manages by example.
- Experienced user of software packages including MS Excel, MS Word, MS Access, MS PowerPoint and MS Office. Also a good understanding of BMS (Business Management Systems) and CAFM (Computer Aided Facilities Management Systems).
- Fluent English language ability both spoken and written.
- Professional and smart appearance at all times.

About the Company

ETA ASCON Group is primarily a Contracting firm in the U.A.E. with expertise ranging from Civil Construction to Electro Mechanical, Elevator Engineering and Facilities Management. Since its inception in 1973, the firm has numerous landmarks in the Emirates that stand as a testimony to the firm’s engineering capabilities. The company is a part of Al Ghurair Group of Companies, who are the most revered and leading business house in the United Arab Emirates.

The Company has undertaken a number of residential projects for major groups; to name a few, Juma Al Majid, Al Futtaim, Sultan Al Owais etc. The Dubai Business Center Opposite to Burjuman, The Deira City Centre Hotel, The Sea Shell Inn hotel apartments in Bur Dubai are a few of the projects which ASCON has constructed. As a group ETA has been involved in almost every major project in the Emirates, including projects like Jumeirah Beach Hotel, The Emmar Towers in Dubai Marina, The Twin Towers, Villas in the Emmar Hills etc.

Beside Dubai, the Company has also developed high value properties in India and Sri Lanka and has delivered more than 2500 Units and developed an area of over 5 Million sq. ft.

To apply: Click here

Friday, February 27, 2015

காக்கி சட்டை - தமிழ்

No comments :
தொலைக்காட்சியில் முகம் காட்டிய நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து, தனக்கான ரசிகர் வட்டத்தை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிவகார்த்திகேயன், முதன்முதலாக காக்கி சட்டை அணிந்து போலீஸ் வேடம் ஏற்று நடிக்கிறார் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகிலும் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நிறைவளிக்கிறது ‘காக்கி சட்டை’.
படத்தில் அதிரடி ஆக்சன் இருந்தாலும், தனது வழக்கமான காமெடியிலும் கலக்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மதிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், படத்தில் ஆரம்பத்தில் அமைதியான போலீசாக வந்து காமெடி பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் திருப்பத்தால் தான் யார் என்பதை நிரூபிக்கும்விதமாக சீரியசாக களமிறங்கி அதிரடி ஆக்சனில் தூள் கிளப்புகிறார்.
மனித உடலுறுப்புகளை வியாபாரப் பொருளாக பாவித்து விற்பனை செய்யும் கொடூர குற்றத்தை கண்டுபிடித்து, அதை முழுமையாக சிவகார்த்திகேயன் எப்படி அழிக்கிறார் என்பது படத்தின் அடிப்படை கதை. இதில் இடையிடையே ரசிக்கும்படியாக ஸ்ரீதிவ்யாவுடன் ரொமான்ஸ் செய்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு போலீஸ் வேடம் நன்றாக பொருந்தியுள்ளது. காமெடியிலும், ஆக்சனிலும் அசத்தியிருக்கிறார்.
ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வரும் பிரபு மனதில் நிற்கிறார். நாயகி ஸ்ரீதிவ்யா படம் முழுவதும் அழகு பதுமையாக வந்து ரசிகர்களை கொள்ளை கொள்கிறார்.
இம்மான் அண்ணாச்சியின் ஒன்லைனர் காமெடி ரசிக்க வைக்கிறது. ஆனால் அவரின் வழக்கமான காமெடி மிஸ்ஸிங்.
படத்தில் மழையில் வரும் சண்டைக் காட்சி பிரமிக்க வைக்கிறது. அஜித், விஜய், ரஜினி போன்ற உச்சநட்சத்திரங்களின் ரசிகர்களை கவரும் விதமாக ஆங்காங்கே வசனங்கள் வைத்து கைதட்டல் வாங்குகிறார் இயக்குனர் துரை செந்தில்குமார். ‘எதிர்நீச்சல்’ படத்தைப் போலவே இந்த படத்திலும் அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமான காட்சிகளை அவர் அமைத்திருப்பது பாராட்டுக்கு உரியது.
சுகுமாரின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கிறது; வண்ணங்களை அள்ளித் தருகிறது. அனிருத்தின் இசையில் அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே செம ஹிட். பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார்.
முதல் பாதி காமெடியாகவும், இரண்டாவது பாதி சீரியசாகவும் செல்வதால், சிவகார்த்திகேயனின் ஏனைய படங்களிலிருந்து இது வித்தியாசமாக இருக்கிறது.
‘காக்கி சட்டை’– ஜெயிக்கும் சட்டை!

குவைத் நாட்டில் பணிபுரிய அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆள் சேர்ப்பு

No comments :
இந்திய அரசின் தொலைத்தொடர்பு துறையின் குவைத் நாட்டு திட்டப்பணிகளுக்கு சென்னையில் அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யும் பணி இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இது குறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கூறியுள்ளதாவது: இந்திய அரசு தொலைத்தொடர்பு துறையின் குவைத் நாட்டு திட்டப்பணிகளுக்கு தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 50 வயதிற்குட்பட்ட டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்ற கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், துவக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 ஆண்டு ஆண்டு அனுபவம் பெற்ற லேபர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த லேபர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகின்றனர். 

மேலும் குவைத் நாட்டில் 2 ஆண்டுகள் பணிபுரிந்து 30 மாதங்களுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் தேவைப்படுகின்றனர். குவைத் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்த பிறகு 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ற ஊதியத்துடன் இலவச விசா, விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் இதர சலுகைகள் வேலையளிப்பவரால் வழங்கப்படும். 


இத்தகுதியுடையவர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள், வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படம் மற்றும் ஒரிஜினல் பாஸ்போட்டுடன் பிப்ரவரி 27, 28 தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் காலை 8 மணிக்கு நேர்முகத் தேர்விற்கு நேரில் செல்ல வேண்டும். நேர்முகத் தேர்வு ‘’எண்.42, ஆலந்தூர் காலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், திரு.வி.க.தொழிற்பேட்டை, சென்னை’’ என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 044-22502267, 22505886, 08220634389 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

மாவட்ட வாலி பால், MSEC பெணகள் , ஹமீதியா பள்ளிஆண்கள், JVC க்ள்ப் அனிகள் வெவ்வேறு பிரிவுகளில் சாம்பியன்ஸ்

No comments :
ராமநாதபுரம் மாவட்ட பெண்கள் கைப்பந்து போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து சாம் பியன் பட்டத்தை பெற்றது.  ராமநாதபுரம் மாவட்ட வாலிபால் கழகம் மற்றும் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி இணைந்து 17வது ஆண்டு மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்கள் மற் றும் பள்ளி மாணவர்களுக் கான ‘சாம்பியன்’ கைப்பந்து போட்டி கீழக்கரையில் நடந்தது. கல்லூரி முதல்வர் முகம்மது ஜஹாபர் போட்டிகளை துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட கைப்பந்துக் கழக தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி முன்னிலை வகித்தார். கைப்பந்துக் கழக செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். ஆண் கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும், பள்ளி மாணவர்கள் பிரிவில் 15 அணிக ளும், மாணவிகள் பிரிவில் 4 அணிகளும் பங்கேற்றன. 


பெண்கள் பிரிவில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டதையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி அணி 2ம் இடத்தையும், கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அணி 3ம் இடத்தையும் பெற்றன. 
ஆண்கள் பிரிவில் ஜே.வி.சி அணி முதலிடத்தையும், மாரியூர் மக்கள் கைப்பந்து அணி 2ம் இடத்தையும், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி 3ம் இடத்தையும் பெற்றன.  பள்ளி மாணவர்கள் பிரிவில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடத்தையும், பரமக்குடி கே.ஜே.இ.எம். பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன. மாணவிகள் பிரிவில் ராமேஸ்வரம் எஸ்.பி.ஏ பள்ளி முதலிடத்தையும், மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி 2ம் இடத்தையும் பெற்றன. 


மாலை நடந்த பரிசளிப்பு விழாவில் விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சுந்தரராஜ், சாம்பியன் பட்டம் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மாவட்ட கைப்பந்துக் கழக நிர்வாகிகள் ராமசுந்தரம், தினேஷ்பாபு, செழியன் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன், மாவட்ட கைப்பந்துக் கழக நிர்வாகிகள் ரமேஷ்பாபு, ரமேஷ் செய்திருந்தனர்.

செய்தி; தினத்தந்தி

ராமநாதபுரம் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள்

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் டயாலிசிஸ் இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது என கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைக்கு உயர்த்தப்பட்டு பொதுமக்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய் பாதிப்பிற்கான சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வகை சிகிச்சைகளும் சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


சிறுநீரக நோய் சிகிச்சைக்காக இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் இம்மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு டயாலிசிஸ் இயந்திரம் தற்பொழுது நிறுவப்பட்டு, கூடுதலாக சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பெற வரும் பயனாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை வழங்கிட டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிகிச்சை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்கள் ஒரு மாதத்திற்குள் வாங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பிற்கான சிகிச்சை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்மருத்துவமனையில் சிறுநீரக நோய் சம்பந்தமான சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இம்மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தீன் கீழ் சிகிச்சை பெற்றிட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிறுநீரக நோய் பாதிப்புடையோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி; தினத்தந்தி

Thursday, February 26, 2015

துபாய் முனிசிபாலிட்டி யில் Call Centre Executive பணி வாய்ப்பு

No comments :
Call Centre Executive
DM Healthcare - Dubai


Handling Calls.

Guiding Patients as per requirement.

Desired Candidate Profile

Handling Calls.

Guiding Patients as per requirement.

Handling Calls.

Guiding Patients as per requirement.

Desired Candidate Profile

Handling Calls.

Guiding Patients as per requirement.

To apply: Click Here

துபாய் விமான நிலையத்தில் Cashier வேலை வாய்ப்பு

No comments :
Cashier
Dubai Airports - Dubai
The purpose of the role is to ensure that all collections from the decentralised cash receipt points of Dubai Airports are received and safely lodged in bank in time, in accordance with the reinforced internal control system approved by CEO / H.H. The President.

For full details about the role and the responsibilities, please click here .

About You The job holder will be educated to at least Diploma level in a relevant field, or they will have an equivalent professional qualification

Important Information for You Please note, this is a shift position. You will receive a monthly shift allowance. 

Dubai Airports offers a variety of benefits. They are based on the grade of the position and current HR Policy. Ask your recruiter for further details on the specific benefits for this position.

As an overview, we provide a generous Annual Leave allowance, together with an Annual Ticket allowance for yourself (and in many grades also for your family). We're pleased to offer Education Assistance for many grades. Medical Insurance is provided for you and in most grades your family. For certain grades we provide transport to and from residential areas in Dubai & Sharjah.

Launchpad, our state of the art learning and development center, offers a large variety of exciting opportunities to help you boost your career. Our Employee Relations team is proud to provide us a busy annual social calendar that includes activities related to cultural, sport, health and wellness. The team also works to provide us with discounts on the purchase of flight tickets, a stay in a hotel, meals out or some other social activity.

Important: As Dubai Airports takes huge leaps forward you should be flexible, based on the operational requirements at the time, to work in either airport or across both airports.

Please note, Dubai Airports employees are evaluated for all positions before external applicants are considered.

Note: you will be required to attach the following: 1. Resume/CV
2. Passport-size photograph
3. Passport Copy

To apply: Click here

தொண்டியில் சிலிண்டர் வெடித்து முகம்மது ஹக் என்பவர் படுகாயம்

No comments :
தொண்டியில் ஒரு கடையில் சிலிண்டர் வெடித்ததில், ஒருவர் பலத்த காயமடைந்தார்.
தொண்டி கிழக்குத் தெருவில் வல்கனைசிங் கடை வைத்திருப்பவர் முகம்மது ஹக்(25). இவர், செவ்வாய்க்கிழமை தனது கடையில் வேலைபார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கம்பிரஷருக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் திடீரென வெடித்ததில், முகம்மது ஹக் பலத்த காயமடைந்தார். மேலும், கடை முற்றிலும் சேதமடைந்தது.

தகவலறிந்த தொண்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, முகம்மது ஹக்கை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி: முகநூல் வழி தொண்டி நண்பர்கள்

மக்கள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இராமேஸ்வரத்தில் மரம் நடு விழா

No comments :
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராமேசுவரம் திருக்கோயிலில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சேதுமாதவர் கோயில் அருகே மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சுந்தரராஜன் வில்வ மரக்கன்றை நட்டு வைத்தார்.

ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், நகர்மன்ற உறுப்பினர்கள் நாகசாமி, மீனாட்சிசுந்தரம், கோயில் உதவிக்கோட்ட மேலாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ், கோயில் பேஷ்கார்கள் அண்ணாதுரை, ராதா, அண்ணா தொழிற்சங்கம் மின்சாரப் பிரிவு கோட்டச் செயலர் முருகேசன், அதிமுக நகர் செயலர் பெருமாள், அம்மா பேரவை செயலர் கஜேந்திரன் உள்பட அதிமுக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

கீழக்கரையில், திருமணமான நான்கே நாளில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

No comments :
கீழக்கரையில், திருமணமான நான்கே நாளில் புதன்கிழமை காலை புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
கீழக்கரை அண்ணா நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் கலையரசி (21). இவருக்கும், சாயல்குடி அருகே உள்ள எஸ்.வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பழனி முத்துபாக்கியம் என்பவருக்கும், கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. புதுமணத் தம்பதிகள் இருவரும் மறுவீட்டுக்கு எஸ்.வாகைகுளம் சென்றுவிட்டு, மறுபடியும் கீழக்கரை திரும்பியுள்ளனர். புதன்கிழமை காலை, பழனிமுத்துபாக்கியம் மீண்டும் வாகைகுளம் செல்லவேண்டும் எனக் கூறினாராம். அதன்படி, இருவரும் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தனராம். அப்போது, வீட்டுக்குள் சென்ற கலையரசி, திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

படுகாயமடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரின் தாயார் விஜயலெட்சுமி, கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான நான்கே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதால், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராம் பிரதீபன் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தி: தினமணி

Wednesday, February 25, 2015

பண மழை பொழிந்தது துபாயில் அல்ல, குவைத்தில்.

No comments :
துபாய் சாலயில் ஏராளமான பணம் சிதறியது தொடர்பாக கல்ஃப் நியூஸ் வெளியிட்ட செய்தியாவது.

கனமான காற்றால் தூக்கி எரியப்பட்டு பண மழை பொழிந்தது உண்மை ஆனால் அது துபாயில் அல்ல குவைத், அல் சூர் தெருவில் உள்ள ஃபேட்பர்கர் ரெஸ்டாரண்ட் அருகில்.

ரெஸ்டாரண்ட் மேலாளர் திரு. ஷஃப்க் ஹம்ஜா இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஏராளமான ஊடக செய்தியாளர்கள் இதை துபை என்று தவறுதாலக் பிரசுரித்து விட்டதாக கல்ஃப் நியூஸ் தெரிவிக்கிறது.

துபாய் MARRIOT ல் Engineering Supervisor வேலை வாய்ப்பு

No comments :
Engineering Supervisor
Marriott - Dubai


150008CP

Job

:

Engineering and Facilities Maintenance

Primary Location

:

ARE-United Arab Emirates-Dubai-The Ritz-Carlton, Dubai International Financial Centre

Organization

:

Ritz-Carlton

Position Type

:

Non-Management/Hourly

Schedule

:

Full-time

At more than 80 award-winning properties worldwide, The Ritz-Carlton Ladies and Gentlemen create experiences so exceptional that long after a guest stays with us, the experience stays with them. As the premier worldwide provider of luxury experiences, we set the standard for rare and special luxury service the world over. We invite you to explore The Ritz-Carlton.

Job Summary

Complete the life safety checklist, including the fire-pump run test and generator run test. Inspect fire sprinkler valves and alarm systems. Assist in development of disaster response protocols. Respond and attend to guest repair requests. Assist management in hiring, training, scheduling, evaluating, counseling, disciplining, and motivating and coaching employees.

Follow all company and safety and security policies and procedures; report maintenance problems, safety hazards, accidents, or injuries; and complete safety training and certifications. Ensure uniform and personal appearance are clean and professional, and maintain confidentiality of proprietary information. Welcome and acknowledge all guests according to company standards, anticipate and address guests' service needs, and assist individuals with disabilities. Develop and maintain positive working relationships with others, support team to reach common goals, and listen and respond appropriately to the concerns of other employees. Ensure adherence to quality expectations and standards; and identify, recommend, develop, and implement new ways to increase organizational efficiency, productivity, quality, safety, and/or cost-savings. Speak with others using clear and professional language. Visually inspect tools, equipment, or machines. Reach overhead and below the knees, including bending, twisting, pulling, and stooping. Move, lift, carry, push, pull, and place objects weighing less than or equal to 10 pounds without assistance. Grasp, turn, and manipulate objects of varying size and weight. Stand, sit, or walk for an extended period of time. Move up and down stairs and/or service ramps. Perform other reasonable job duties as requested by Supervisors.

The Ritz-Carlton does not discriminate on the basis of disability, veteran status or any other basis protected under federal, state or local laws

To Apply: Click Here

இராமநாதபுரத்தில் நகை கண்காட்சி

No comments :
இராமநாதபுரத்தில் உலகதரம் வாய்ந்த நகை கண்காட்சி வரும் பிப்ரவரி 27,28 மார்ச் 1,2 ம் தேதிகளில் தேதிகளில் மலபார் நகை கடையில் நடக்கிறது இங்கு இந்தியாவில் அணைத்து மலபார் நகைக்கடைகளில் உள்ள நகைகள் வரவழைக்கபட்டு மக்கள் கண்காட்சிக்கும் மற்றும் விற்பனையும் செய்யப்பட உள்ளது.
இது குறித்து இராமநாதபுரம் கிளை மலபார் நகைக்கடையின் இயக்குனர் ஜனாப் சபீர் அஹமது அவர்களிடம் கேட்டபோது . தமிழ் நாட்டிலே ஏன் இந்தியாவிலே முதன் முறையாக நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக எங்களது நிறுவனங்களில் உள்ள அணைத்து கடைகளிலும் உள்ள உலக தரம் வாய்ந்த நகைகள்.
கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவழைத்து வாடிக்கையாளர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் நடைபெறஉள்ளது.
இந்த கண்காட்சியில் ஆண்டிக் நகைகள் ,டைமன்ட் புதிய டிசைன்,டெம்பில் டிசைன் நகைகள் ,திருமண டிஸைன் ,வடநாடு திருமண டிஸைன்,மற்றும் இளம்பெண்களுக்கான பிரத்யோக நகைகள்,சிறுமிகளுக்கான புத்தம் புதிய டிசைன்கள் .
மற்றும் ஆண்களுக்கான வாட்ச் ராடோ ,டிசொட் ,கேசியோ . இவை அணைத்து நகைகளும் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வரவுள்ளது என்று கூறினார்.

செய்தி: கீழக்கரை நகர் நல இயக்கம்

தேவிபட்டினம் பள்ளி ஆண்டு விழா

No comments :
தேவிபட்டினம் சாலையில் வெண்குளம் கிராமத்தில் உள்ள ஷிபான் நூர் குளோபல் அகாதெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் டாக்டர் ஐ. மன்சூர் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி டாக்டர் நூருல்ஹவ்வா முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முதல்வர் விக்டர் ஞானராஜ் வரவேற்றார்.

இதில், யோகா, கராத்தே ஆகிய கலைகளில் சாகசங்களை செய்து காட்டிய மாணவ, மாணவியர்க்கு வேளாண்மைத் துறை துணை இயக்குநர் இசட். கமாலுதீனும், பிரமிட் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்ஹூசேனும் பரிசுகளை வழங்கினர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்க்கு வழக்குரைஞர் சுல்த்தான் அப்துல்காதர் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.


விழாவில், பள்ளியின் தனி அலுவலர் சீனிவாசன், நல்லாசிரியர் லியாகத் அலி, ஐ.எஸ்.ஓ. ஆலோசகர் சாகுல்ஹமீது, தமிழ்ச் சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம் மற்றும் ரிபாய்கனி, இர்ஷாத் உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.