முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 10, 2015

பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டியதில்லை - தமிழக அரசு

No comments :
பரங்கிப்பேட்டை கலீல் பாகவி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

சில அரசு / தனியார் பள்ளிக்கூடங்களில் உறுதி மொழி எடுக்கும்போது வலது கையை நெஞ்சில் வைக்க வேண்டும் என பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார்கள் பள்ளி ஆசிரியர்கள / நிர்வாகிகள். இது குறித்து அரசு சொல்வது என்ன? இதுதான் வழிமுறையா? என்று தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். 


அதற்கு, தமிழக பள்ளி கல்வித் துறை இயக்குநரிடமிருந்து வந்த பதிலை பொதுமக்கள் முன் வைக்கின்றோம்.

தமிழ் நாடு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

No comments :
தமிழ் நாடு காவல் துறை சப்-இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கு


TN Sub inspector application - click here
ஆன் லைனில் விண்ணப்ப படிவங்கள் தரவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்- 10-3-2015.

வரும் 14ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு?

No comments :
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதன் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கையில் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை யில் முதல் ரவுண்டில் மட்டும் ப..ஜ.க வின் கிரண்பெடி முன்னிலையில் இருந்தார். அடுத்த சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கையில் பின்தங்கினார். தொடர்ந்து அவர் தோல்வி முகத்தில் உள்ளார்.

டெல்லி தேர்தல், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் என்ற தனி மனிதருக்கு எதிரான போட்டி போல் மாறிவிட்டது. அவர் போட்டியில் வெற்றி பெற்று விட்டார். நாங்கள் இருவரும் போட்டியாளர்கள் நாங்கள் இருவரும் போட்டியில் பங்கேற்று விளையாடினோம். நாங்கள் மொத்தமாக சேர்ந்து மோதினோம். ஆனால் தனி ஒரு ஆள் வெற்றி பெற்று விட்டார்.



டெல்லி தேர்தல் தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். எனது அணுகுமுறைகளும், கொள்கைகளும் தோற்றுப் போய்விட்டது. அது என்னு டையது தான். அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்.என்று கிறன் பெடி கூறி உள்ளார்.
இதே போல, பா.ஜனதா வின் மற்ற முக்கிய வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர். தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தனது டுவிட்டரில் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கிரண்பெடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அரவைந்த கெஜ்ரிவாலுக்கு முழு மதிப்பெண் கிடைத்து உள்ளது.வாழ்த்துக்கள்.இப்போது அவர் டெல்லியை உயரமான இடத்திற்கு கொண்டு செல்லட்டும். உலகதரத்திலான நகரமாக மாற்றட்டும்.எனகூறி உள்ளார்.

இதனிடையே, வரும் 14ஆம் தேதி டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் காப்பிய விழா

No comments :
ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் கனகமணி வாகன வளாகத்தில் காப்பிய விழா ஞாயிற்றுக்கிழமை ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் சங்கத் தலைவர் க. சுப்பையா தலைமையில் நடைபெற்றது.
விழாவுக்கு சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம், துணைத் தலைவர்கள் குழ. விவேகானந்தன், வைகிங் எம்.எஸ். கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கா. மங்களசுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் புலவர் மணிமேகலை சோமசுந்தரம் (மணிமேகலை மாண்பு), பி. குமரன் (சீறடிச்சிலம்பு), புலவர். பழ. முருகேசன் (நற்றினையில் நற்றமிழர் பண்பாடு), கவிஞர் மானுடப்பிரியன் (பூங்குன்றனாரின் பொன்வரிகள்), மு. அப்துல் மாலிக் (சிந்தாமணியின் சீர்மைகள்), புலவர் சு.தி. சங்கரநாராயணன் (வளையாபதி குண்டலகேசியின் வனப்புகள்), மூத்த வழக்குரைஞர் மு. ராமசாமி (வள்ளுவரின் வாழ்வியல் நெறி)உள்ளிட்ட தமிழறிஞர்கள் பல்வேறு காப்பியத் தலைப்புகளில் பேசினர்.

நிறைவாக சங்கச் செயலரும் கண் மருத்துவருமான பொ. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

நன்றி: தினமணி

பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. ஷேக்நபிக்கு பாராட்டு

No comments :
பரமக்குடி கே.ஜே. கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திரு. ஷேக்நபி. இவர்குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர்
க.நந்தகுமாரிடம் சிறந்த ஆங்கில ஆசிரியருக்கான விருது பெற்றார்.
ஷேக்நபிக்கு பள்ளி கல்விக்குழு சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளியின் தாளாளர் இ. முகம்மது உமர் தலைமை வகித்தார். கீழ முஸ்லிம் ஜமாத் சபைத் தலைவர் முகம்மது யாக்கூப், செயலர் எஸ்.என்.ஏ. முகம்மது ஈசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமையாசிரியர் எம். அஜ்மல்கான் வரவேற்றார். ஆசிரியர்கள் பூங்குழலி, எம். புரோஸ்கான், அஸ்கர்அலி, கலீல்ரகுமான் ஆகியோர் பாராட்டிப் பேசினர். உதவித் தலைமையாசிரியர் முகம்மது யாக்கூப் நன்றி கூறினார்

ஷமிதாப் - ஹிந்தி

No comments :
வாய் பேச முடியாத டேனிஷ் (தனுஷ்) என்னும் இளைஞ னுக்கு சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல். வாய்ப்பு தேடி மும்பைக்கு வருகிறார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்து உதவி இயக்குநர் அக்‌ஷரா (அக்‌ஷரா ஹாசன்) உதவ முன்வருகிறார். ஆனால், பேசமுடியாத நடிகரை பாலிவுட் எப்படி ஏற்றுக்கொள்ளும்?


பேச இயலாதவர் இன்னொருவர் குரலால் பேசதொழில்நுட்பம் கைகொடுக்கிறது. ஆனால் அதற்கு ஒரு குரல் வேண்டுமே? பல குரல் களைப் பரிசீலித்துத் திருப்தி அடை யாத அக்‌ஷராவும் டேனிஷும் மும்பை கல்லறைத் தோட்டத்தில் முதியவர் அமிதாப் சின்ஹாவின் (அமிதாப் பச்சன்) கம்பீரமான குரலைக் கண்டு பரவசம் அடைகிறார்கள். சினிமா கனவு நிறைவேறாமல் விரக்தியில் குடிகாரனாக அலையும் அமிதாபைச் சம்மதிக்கவைக்கிறார்கள். ஷமிதாப் என்ற பெயருடன் அறிமுகமாகிறார் டேனிஷ். அமிதாபின் கம்பீரக் குரலா லும் தன் நடிப்புத் திறமையாலும், ஒரே படத்தில் பெரிய நட்சத்திரமாகி விடுகிறார் ஷமிதாப்.
மூவரின் திறமையான நாடகத் தால் நிஜ வாழ்விலும் இந்த இரவல் குரல் தொடர்கிறது. வெற்றியும் தொடர் கிறது. கனவு போன்ற இந்த வளர்ச்சிக்குக் குறுக்கே வருகிறது ஈகோ யுத்தம். டேனிஷின் நட்சத்திர அந்தஸ்து தன் குரலால்தான் கிடைத் தது என்று அமிதாப் நினைக்க, தன் திறமையால் தான் எல்லாமே நடக்கிறது என டேனிஷ் மமதை கொள்ள, வெற்றிக் கூட்டணி உடைகிறது. டேனிஷின் நட்சத்திர பிம்பம் சரியத் தொடங்குகிறது. இருவரில் யார் ஈகோ ஜெயித்தது?

திரைக்கதை தனுஷை சுற்றி நகர்ந்தாலும் அமிதாபின் குரல்தான் படத்தின் நிஜக் கதாநாயகன்.
திரையுலகில் இருக்கும் போட்டி, பொறாமை, சுயநலம், நட்சத்திர போதை எனப் பல அம்சங்களையும் இப்படம் கையாள்கிறது.
தனுஷுக்கு அக்‌ஷராவின் உதவி கிடைக்கும் விதம், அவருக்கான மாற்று ஏற்பாடுகள் நடக்கும் வேகம் எல்லாம் மசாலா சினிமாவுக்கே உரிய சுதந்திரங்கள். படத்தின் ஆதார மையத்தை பாதிக்காததால் இவற்றை மன்னித்துவிடலாம். இரவல் குரல் என் னும் ரகசியத்தை மூவரும் காப்பாற்று வதற்கான காட்சிகள் சுவாரஸ்ய மானவை.
உன் எடையைவிட என் குரல் கனமானதுஎன்று அமிதாப் கெத்து காட்டுவதும் மது, தண்ணீர் ஆகிய வற்றை வைத்துப் பேசும் வசனங் களும் அரங்கை அதிர வைக் கின்றன. டேனிஷுக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்படும் நெருக்கத்தின் போது டேனிஷும் அமிதாபும் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் ரகளை. ஈகோ யுத்தம் மெல்ல மெல்ல முறுக் கேறிக்கொண்டே போகும் விதம் நம்பக மாக உள்ளது. இருவரின் பிரிவும் அதனால் இருவரும் படும் அவஸ்தை களும் சரியாகவே சித்தரிக்கப் பட்டுள்ளன.

படத்தின் முதல் பாதி விறுவிறுப் பாக, புத்துணர்ச்சியுடன் நகர்கிறது. இரண்டாம் பாதி திரைக்கதை அலுப்பை ஏற்படுத்துகிறது. உருக்க மான காட்சிகளை அமைப்பதில் வல்லவரான பால்கி தன் முத்தி ரையை முதல் பாதியில் நன்கு பதித் திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் உருக்கம் எல்லை மீறி மிகை உணர்ச்சியாகிவிடுகிறது. மனதை கனக்கச் செய்யும் முடிவுதான் நல்ல படத்துக்கு அடையாளம் என்று யார் சொன்னது?
எனினும் அமிதாப், தனுஷ் நடிப்பு, இளையராஜா இசை, பி.சி.ராம் ஒளிப்பதிவு ஆகியவை இந்த குறை களை மறக்கச் செய்துவிடுகின்றன. சீனி கம்படத்தில் அத்தனை பாடல் களுக்கும் தனது பழைய தமிழ் டியூன் களை பயன்படுத்திய ராஜா, இதில் அப்படிச் செய்யவில்லை. இரண்டே நிமிடம் மட்டும் வரும் ஆசைய காத்துல தூது விட்டுடியூன் தவிர, மற்ற பாடல்கள் புதுசு.

நடிப்பில் அசத்துகிறார் தனுஷ். உடல் மொழியால் பேசும் கலை அவருக்கு நன்கு வசப்படுகிறது. ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்ச்சிகளை உணர்த்தும் காட்சிகள் அவரது நடிப்புத் திறமையைப் பறைசாற்றுகின்றன. அமிதாபை முதலில் சந்திக்கும்போது அவரிடம் நடித்துக் காட்டுவது, அவராலேயே அவமானப்படுவது, அவரைப் பிரிந்த பிறகு உணர்ச்சியைக் கொட்டுவது, உண்மையைச் சொல்லிவிட வேண் டும் என்பதற்கான காரணங்களை அடுக்குவது ஆகிய காட்சிகளில் அபாரம்.
பேசாமல் தனுஷ் ஸ்கோர் செய்ய, பேச்சின் மூலமாகவே அமிதாப் ஸ்கோர் செய்கிறார். தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து ஏமாறும் காட்சிகளிலும், தனுஷை சீண்டும் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார். தன் குரலுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் தனக்குக் கிடைக்கவில்லையே என்று குமுறும் இடத்தில் மலைபோல உயர்கிறார். கடைசி காட்சியில் பேசாமலேயே நெகிழவைக்கிறார்.

இரண்டு வலிமையான நடிகர்களு டன் அக்‌ஷரா ஹாசன் (அறிமுகம்) தன் இருப்பை திரையில் வெற்றிகரமாகப் பதிவுசெய்திருக்கிறார். படத்தொகுப் பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கலாம்.
திரைக்கதைக்கு ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்வது, நடிகர்களுக்காகத் திரைக்கதை அமைப்பது என்ற இரண்டு வகைகளில் ஷமிதாப் இரண்டாவது வகை. அபார நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு ஆகியவை தொய்வையும் மிகையான காட்சிகளையும் மீறிப் படத்தை ரசிக்கவைக்கின்றன.