முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 31, 2015

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் விழா!!

No comments :
ராமநாதபுரத்தை ஆண்ட மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் தியாகத்தை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்வது அவசியம் என மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் திங்கள்கிழமை பேசினார்.

ராமநாதபுரத்தில் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து, அவரது உருவப்படத்தை திறந்து வைத்து ஆட்சியர் மேலும் பேசியதாவது:
தேசத்தின் விடுதலைக்காக பலர் போராடியிருந்தாலும் அவர்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பவர்களுள் ஒருவர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி. ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்டமைக்காக 24 ஆண்டுகள் சிறையிலேயே கழித்ததுடன் அங்கேயே உயிரையும் இழந்தவர். இவரது தியாகத்தை இளைய தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர். பின்னர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி தொடர்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பரிசுகளையும் ஆட்சியர் வழங்கினார்.

கீழக்கரையில் நாளை 1.04.2015 அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்

No comments :
கீழக்கரை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவரும், அம்மா மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் நாளை  1.04.2015 (புதன்கிழமை) அன்று கீழக்கரை உசைனியா கல்யாண மஹாலில் நடைபெறுகிறது.


பொதுமக்கள் இதை தவறாது பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இன்று முதல் FLY DUBAI ”துபாய்- சென்னை” புதிய வான் வழித்தடம்!!

No comments :
துபாய் அரசுக்கு சொந்தமான (FLY DUBAI) “ஃபிளை துபாய்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் இன்று முதல் (31.03.2015) துபாய் சென்னை இடையே விமான போக்குவரத்தை துவக்கவுள்ளது. துபாய் சென்னை வான்வழித்தடத்தையும் சேர்த்து 46 நாடுகளில் தனது 89வது சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


துபாய் புறப்பாடு: இரவு 22.05 மணி
சென்னை வருகை: அதிகாலை 4.00 மணி

சென்னை: புறப்பாடு: அதிகாலை 4.45 மணி
துபாய் வருகை: மாலை 7.35 மணி


செய்தி: FLY DUBAI

கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” பள்ளியில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம்!!

No comments :
கீழக்கரை “இஸ்லாமியா மெட்ரிக்” பள்ளியில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம்!!


செய்தி: திரு.MMK இப்ராஹீம், தாளாளர், இஸ்லாமியா கல்வி நிறுவனம்