முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 23, 2015

மதுரை- துபாய் விமானத்தில் இயந்திரக்கோளாறு. 182 பிரயாணிகள் உயிர் தப்பினர்!

No comments :

மதுரையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் திடீர் எந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டது. 
இதனால் அதிர்ஷ்டவசமாக 182 பேர் உயிர் தப்பினர்.

துபாய் விமானம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு துபாய்க்கு 175 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் சென்னை வான் எல்லையில் இரவு 10.45 மணிக்கு வந்தபோது திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.






உடனடியாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, விமானத்தில் கோளாறு ஏற்பட்டு உள்ளதாகவும், சென்னையில் அவசரமாக தரை இறக்க அனுமதிக்கும்படியும் கோரினார்.சென்னையில் தரை இறங்கியது

இதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பின்னர் தொழில் நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது.

அதன் பின்னர் நள்ளிரவு 2.15 மணிக்கு விமானம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் விமானத்தில் இருந்த 182 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

செய்தி உதவி: விகளத்தூர்.காம்

கத்தார் Al-Khayarin நிறுவனத்தில் HVAC FOREMAN வேலை வாய்ப்பு!!

No comments :

Job Description

Foreman – HVAC


Responsible for all HVAC work such as supervising, scheduling, installation maintenance and repair works, Ducts fabrication and Installation, equipment installation such as AHU’s Chiller and other equipment. like Grills, Diffusers, Dampers etc. Prepare Duct quantities and order, capable to understand and prepare shop drawings. Experience: 10 – 15 years


Key Skill(s)



About Company

It is great pleasure to inform you all that, we have an Overseas Recruitment Firm under the banner of M/s. M. I. ENTERPRISES in Mumbai (India). We are a team of professionals & specialized in providing manpower to Gulf companies for more than two decades and since then we have been pioneer in Recruitment of Manpower.



TO APPLY: CLICK HERE

முஹம்மது சதக் அறக்கட்டளை வழங்கும் இலவச பொறியியல் படிப்பு!!

No comments :
முஹம்மது சதக் அறக்கட்டளை வழங்கும் இலவச பொறியியல் படிப்பு!!




தகவல்: முஹம்மது சதக் அறக்கட்டளை


கீழக்கரை நகராட்சி கூட்டம்! 67 தீர்மானங்கள் நிறைவேற்றம்! திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!!

No comments :
கீழக்கரை நகராட்சி கூட்டம் இன்று காலை நடை பெற்றது.

தலைவர் ராவியத்துல் கதரியா தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் ஹாஜா முகைதீன் முன்னிலையில், கமிஷனர் செ.முருகேசன் வரவேற்றார்.


மொத்தம் 18 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளின் குறைகளை தெரிவித்தனர்.

திமுக கவுன்சிலர் திரு. ஹாஜா முகைதீன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு:

நகராட்சியில் ஒன்றறை கோடி நிதி உள்ளது. அதை வைத்து டெண்டர் விட்டுள்ளீர்கள். ஆனால், தலைவரிடம் கேட்டால் நிதிப் பற்றாக்குறையாக உள்ளது, என்கிறார்.
மண்புழு உரம் தயாரிக்க ஜே.சி.பி., இயந்திரத்திற்கு ரூ.40,000 வாடகை வழங்க வேண்டிய இடத்தில் ரூ.1,35,000 வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தட்டாந்தோப்புதெரு, புதுபஸ் ஸ்டாண்ட், புதுக்குடியில் உள்ள கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷனில் 3 பேர் பணியில் உள்ளனர். ஆனால், 6 பேருக்கான ஊதியம் வருடத்திற்கு ரூ.7 லட்சம் எடுக்கப்படுகிறது.
நகராட்சி தலைவரின் ஜீப் டிரைவருக்கு வருட ஊதியமாக ரூ.1,04,000 ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செலவு செய்கின்றனர். ஆனால், நிரந்தர பணியிட டிரைவர் தான் அந்த ஜீப்பை ஓட்டுகிறார். நகராட்சி பணம் முறைகேடாக வீணடிக்கப்படுகிறது, என்றார்.

வார்டு குறைகளை கூறுங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று பதிலளிக்கப்பட்டது, மற்ற குற்றச்சாட்டுக்களுக்கு தெளிவான பதிலில்லை.

கீழக்கரை முக்கிய சாலைக்கு, மறைந்த புரவலர், திரு. பி.எஸ் அப்துல் ரஹ்மான் பெயரைச் சூட்டுவது,
நகராட்சி மன்றத்தை இலவசமாக அளித்த செ.மு.ஹமீது அப்துல் காதர் அவர்களின் பெயரை மன்ற அவைக்கு அறிவிப்பது,
நகரின் முக்கிய இடங்களில் பொது கழிப்பறை தேவை உள்ளிட்ட 67 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 


மாவட்ட ”கிரிக்கெட்” போட்டி. கீழக்கரை MSEC அணி சாம்பியன்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி (MSEC) சாம்பியன் பட்டம் வென்றது. 



ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் 2014-15க்கான முதல் தர 50 ஓவர் கிரிக் கெட் லீக் போட்டிகளை நடத்தியது. இதில் கலந்து கொண்ட கீழக்கரை முகம்மதுசதக் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்ற 9 அணிகளை வென்று லீக் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் பெற்றனர்.

வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களை அறக்கட்டளை தலைவர் ஜனாப் அல்ஹாஜ், முகம்மது யூசுப், அறக்கட்டளை செயலாளர் ஹாஜியாயினி சர்மிளா, உறுப்பினர் ஹுசைன், முதல்வர் முனைவர் முகம்மது ஜஹாபர், உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், கல்லூரி துறைதலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.

வரும் (சனி-ஞாயிறு) ஏப்ரல் 25-26 தேதிகளில், ராமநாதபுரத்தில் “பாஸ்போர்ட்” முகாம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்.25,26 ஆகிய தேதிகளில் பாஸ்போர்ட் முகாம் நடைபெறுகிறது.

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாஸ் போர்ட் சேவையை விரிவு படுத்தும் எண்ணத்தில் மாவட்டம் தோறும் பாஸ் போர்ட் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.  இதன் அடிப்படையில் மதுரை மண்டல பாஸ் போர்ட் அலுவலம் வருகிற 25, 26ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு பாஸ் போர்ட் முகாம் நடத்த உள்ளது.


இதில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனின் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவின் போது பாஸ் போர்ட் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தில் Camp Location என்ற இடத்தில் ராமநாதபுரம் Camp என்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்ட   மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  வேறு மாவட்ட மக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. முகாமில்     தட்கல், போலீஸ் தடையின்மை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள்    ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

முன்பதிவு பெற்ற விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வரும் போது விண்ணப்ப பதிவேட்டில் உள்ள தேதி, நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ARN Sheet, 2 பாஸ் போர்ட் போட்டோ. தேவையான அசல் சான்றிதழ்கள்    மற்றும் அதன் நகல்கள் கொண்டு வரவேண்டும். சான்றிதழ் விபரங்களை www.passportindia.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


இது த விர 25ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடை பெற உள்ளது. இதில் வெளிநாட்டுக்கு செல்ல பாஸ் போர்ட், விசா பெறும் முறை, அதில் உள்ள இடற்பாடுகள் குறித்த    சந்தேகங்கள் ஆகியவற்றை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் நந்தகுமார் கூறினார்.