முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 24, 2015

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 3!!

No comments :
இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பதவி முதல் மேல்நிலை அதிகாரி வரையில் பல்வேறு விதமான பணிகளுக்குப் போட்டித்தேர்வு நடத்திப் பணியாளர்களைத் தேர்வுசெய்துகொள்கிறது. அந்த வகையில், தற்போது 504 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


உதவியாளர் பணி:

உதவியாளர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. வயது வரம்பு 18 முதல் 28 வரை. எனினும், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் இதர வங்கித்தேர்வுகளைப் போன்று, ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, கணிதத்திறன், கம்ப்யூட்டர் ஆகிய 5 பகுதிகளில் இருந்து அப்டெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 40 வினாக்கள் வீதம் 5 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு மதிப்பெண்கள் 200. ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம்.

தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. எனவே, தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்காமல் விட்டுவிடுவதே நல்லது.

கடைசித் தேதி:

உரிய கல்வித்தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) சென்று ஆன்லைன் மூலமாக ஜூலை 3-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. தேர்வு முடிவும் அந்த மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டு விடும். உதவியாளர் பணிக்கு மாதச் சம்பளம் ரூ.25 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும்.

பணியில் சேர்ந்த பிறகு பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் எழுதி மேல்பணிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.



கீழக்கரை நகராட்சிக்கு எதிராக அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!!

No comments :
கீழக்கரை நகராட்சிக்கு எதிராக அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமபந்தமான துண்டு பிரசுரத்தை கீழ் காண்க:


ஆனால் இது சம்பந்தமாக காவல் துறை அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அனுமதி கிடைக்காவைட்டாலும் போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

UAE ள் 156 மில்லியன் திர்ஹம் செலவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம்

No comments :
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் சுமார் 156 மில்லியன் திர்ஹம் செலவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் அமைக்கப்பட்ட "Family Village" திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள சிறார்களுடன் மிக அன்பாக அன்னியோன்னியமாக பழகும் படங்கள் இவை.




“Orphans are our children. Caring for them is our religious, ethical and governmental duty,” said Shaikh Mohammad.

பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற சிறார்கள் எம்முடைய (நாட்டுடைய) பிள்ளைகள் என்று அறிவித்தார். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பது அரசாங்கத்தின் மனிதாபமானமிக்க கடமை என்று கூறினார்.

செய்தி: கல்ஃப் நியூஸ், துபாய்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வழங்கும் தமிழகத்து நோன்புக் கஞ்சி!

No comments :

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வழங்கும் தமிழகத்து நோன்புக் கஞ்சி!

தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!!


குவைத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக கடந்த பத்து ஆண்டுகளாக சமயம்சமூகம்கல்வி மற்றும் சேவை தளங்களில் சிறப்பாக சமுதாயப் பணியாற்றி வரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) கடந்த 2013 வருடம் முதல் குவைத்தில் முதல் முறையாக நோன்புக் கஞ்சியுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளை சங்கத்தின் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பேருரை நிகழ்த்தப்படும் குவைத்ஃகைத்தான் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஏற்பாடு செய்துள்ளது.

குவைத்தில் கடந்த புதன்கிழமை (17.06.2015) மாலை ரமழான் நோன்பு துவங்கியதையடுத்து வியாழன் (18.06.2015) மாலை முதல் தினந்தோறும் நோன்பு திறப்பதற்கு தமிழகத்து நோன்புக் கஞ்சியுடன் பேரீத்தம் பழம்தண்ணீர்மோர்குளிர் பானம்ஆப்பிள்ஆரஞ்சுவாழைப்பழம்திராட்சைதர்பூசணி போன்ற பழ வகைகள்வடைசமோசாபஜ்ஜி போன்ற சிற்றுண்டி வகைகள் மற்றும் இனிப்பு பலகாரங்கள்மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு உணவு உள்ளிட்டவற்றவற்றை நோன்பாளிகளுக்கு வழங்கி வருகிறது.





தினந்தோறும் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக சிந்தைக்கினிய சிற்றுரைகள், உள்ளங்களை நிம்மதியாக்கும் இறை நினைவு (திக்ர்) மஜ்லிஸ், அதைத் தொடர்ந்து சிறப்பான துஆவுடன் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இஷா மற்றும் தராவீஹ் (ரமழான் சிறப்புத் தொழுகை 20 ரக்அத்துகள்) தொழுகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சங்கத்தின் நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலில் 50க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் நோன்பு திறப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நோன்பு திறக்க வருகை தரும் நோன்பாளிகளை இன்முகத்துடன் வரவேற்று, அன்பாக அமர வைத்து, சிறப்பான முறையில் உபசாரம் செய்து, தாயகத்தில் இருப்பதை போன்ற சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைப்பதற்குண்டான சிறப்பான பணிகளை செய்வதற்கு சங்கத்தின் நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், களப்பணியாளர்களும் தயார் நிலையில் இருப்பதாக சங்கத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

இவ்வருடத்தின் முதல் நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் 150 சகோதரிகள் உட்பட 800க்கும் அதிகமானோர், இரண்டாம் நாள் 200 சகோதரிகள் உட்பட 1,200க்கும் அதிகமானோர், மூன்றாம் நாள் 150 சகோதரிகள் உட்பட 1,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

கடந்த 2013ல் ஏறக்குறைய 10,000 சகோதர, சகோதரிகளும், 2014ல் ஏறக்குறைய 20,000 சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டனர். குவைத் வெளிநாட்டு அமைப்புகள் வரலாற்றில் இது ஓர் மைல்கல் என்றால் அது மிகையல்ல. K-Tic சங்கம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகள் குவைத் வாழ் தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அல்ஹம்து லில்லாஹ்...!

குவைத்தில் வசிக்கும் சகோதரர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதுடன், தங்களின் சொந்தங்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வருமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்க நிர்வாகிகள்.

காணொளியைக் காண... https://www.facebook.com/q8tic/videos/911256072281562/ -https://youtu.be/feJX_XnnlJQ

மேலதிக செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை சங்கத்தின் இணையதளத்திலும், முகநூல் பக்கத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

துரித சேவை அலைபேசி / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் : (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com

ராமநாதபுரம் மாவட்ட இ-சேவை மையங்களில் தேவையான சான்றிழ்களை பெறலாம்!!

No comments :
பொதுமக்கள் இ-சேவை மையங்களை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சான்றிழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு கேபிள் டி.வி. துணை மேலாளர் தெரிவித்துள்ளார்.

இ-சேவை மையம்:

இதுகுறித்து அரசு கேபிள் டி.வி. துணை மேலாளர் ராமன் கூறியுள்ளதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ராமநாதபுரமராமேசுவரம், திருவாடானை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி மற்றும் கடலாடி தாலுகா அலுவலங்களில் அரசு பொது இ-சேவை மையம் தொடங்கப்பட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொது இ-சேவை மையங்கள் மூலம் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பொது இ-சேவை மையங்கள் மூலம் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மூவலு£ர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்¢பு திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நிதி உதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் போன்றவற்றுக்கு மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்¢கப்பட்டு வருகிறது. 



அலைச்சல் தவிர்ப்பு:

மேலும் இந்த பொது இ-சேவை மையங்கள் மூலம் மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு பெறுவதற்¢கு விண்ணப்பம் செய்வதற்கும், தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கும், பாஸ்போர்ட்டு பெறுவதற்கும், ஆயுள் காப்பீட்டு கழகத்தின் தொகை செலுத்துவதற்கும் தற்போது இ-சேவை மையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மக்களுக்கான சேவைகள் வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகம் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என்று சான்றிதழ்களை பெற தனித்தனியே அலைவது முற்றிலும் தவிர்க்கப்படும். தாலுகா அலுவலக தலைமை இடத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொது இ-சேவை மையங்களில் குடும்ப அட்டை உள்ளிட்ட தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட பிறகு ஆன்லைன் மூலமாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மற்றும் உரிய துறை அலுவலர்களின் ஒப்புதலுடன் சான்றிதழ்கள் விரைவாக வழங்கப்படுகிறது. விண்ணப்¢பித்தவர்களின் சான்று தயாரானவுடன் அவர்களது செல்போனிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். இத்தகவல் கிடைக்கப்பெற்றவுடன் விண்ணப்பதாரர்கள் இந்த மையத்தில் உரிய சான்றினை பெற்றுக்கொள்ளலாம்¢. 

மின்னணு:

இதன் காரணமாக மக்களுக்கு தேவையான சான்றுகளை ஒரே இடத்தில் விண்ணப்பித்து அங்கேயே அதனைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இந்த பொது இ - சேவை மையங்களின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், திருமண நிதி உதவித்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ் என ஏறக்குறைய 20,000க்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து அனைவருக்கும் உரிய சான்றி தழ்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதர மனுக்களும் மின்னணு மூலம் வழங்கிடும் நடவடிக்கையில் உள்ளது.

மேலும் இந்த மையங்கள் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டையும் வழங்கப்படுகின்றது. இந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளைப் பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்கு சென்று, ஒப்புகை சீட்டில் உள்ள பதிவு எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதேபோல ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப்பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ரூ.30 செலுத்தி ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளலாம். இந்த மையங்கள் ஞாயிற்றுக் கிழமை மற்றும் இதர அரசு விடுமுறைகள் தவிர மற்ற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் நேரில் சென்று அரசின் சேவைகளை பெறலாம்.


செய்தி: தினத்தந்தி