முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 29, 2015

ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களை சந்தித்து குறை கேட்பு!!

No comments :
ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் அவர்கள் தொகுதி ஆய்வின்போது பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்கள் ! 

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தொகுதி ஆய்வு நடைபெற்றது . அதுசமயம் பொதுமக்களின் குறைகள் கேட்டறியப்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சி வெளிப்பட்டணம் 15 வது வார்டில் உள்ள கொல்லன் பட்டறைத்தெரு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் தெரு முனையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின்கம்பத்தை இடம்மாற்றக்கோரியும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கோரிக்கைமனு அளிக்கப்பட்டுள்ளது.



பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சகோ.B.அன்வர் அலி. மாநில தேர்தல் அதிகாரி சகோ.வாணி முஹம்மது சித்திக்மூத்த நிர்வாகி பாக்கர் அலி, செயலாளர் பிஸ்மி, மாணவரணி செயலாளர் புர்க்கான் அலி, மன்சூர், சக்கரக்கோட்டை ருகைபு, ஆற்றங்கரை மமக செயலாளர் சகோ.நூருல் அஃப்பான் நகர் கிளை நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினரின் செயலாளர் தாஹிர் சைபுதீன் உடன் இருந்தனர்.

செய்தி: இராமநாதபுர MLA அலுவலகம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

சிறுபான்மையின மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை!!

No comments :

சிறுபான்மையின பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் நந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கல்வியில் சிறந்து விளங்கும் வசதியின்றி கல்வியினைத் தொடர சிரமப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை திட்டம் மூலம் உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மற்றும் பார்சி மதங்களைச் சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டிற்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்தாண்டிற்கு தமிழகத்திற்கு 1,707 சிறுபான்மை மாணவிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


தகுதிகள்: 

10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று நடப்பு கல்வி ஆண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 11ம் வகுப்பு பயில்பவராக இருக்க வேண்டும். 

சேர்க்கை அனுமதிச்சீட்டு கடித நகல் இணைக்க வேண்டும். 

குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும். வருமானச் சான்று அல்லது ஓய்வூதியம் ஆணை அல்லது ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் அவசியம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் இதர விபரங்கள் www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 

பிளஸ் 2 உதவித் தொகை பெற அம்மாணவிகள் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

கல்வி நிலைய தலைமையாசிரியர் அல்லது தாளாளர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்து பெற்று அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கை 1ல் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்பப் படிவம், பிற்சேர்க்கை 1, 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றின் அசல் ஆகியவற்றுடன் 

‘‘செயலாளர், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை
செல்ம்ஸ் போர்ட் ரோடு
புதுடில்லி-110055’’ 

என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30 மாலை 5 மணிக்குள் சேரும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா!!

No comments :
ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட மக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், முதலாவது புத்தகத் திருவிழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, அதே ஆண்டில் (2014 இல்) செப்டம்பரில் 2 ஆவது புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது.


இவ்விரு புத்தகத் திருவிழாக்களையும் லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு, பயனுள்ள ஏராளமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, ராமநாதபுரத்தில் 3 ஆவது புத்தகத் திருவிழா, வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற இருக்கின்றன. 

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவுக்கு, அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இதை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் மற்றும் பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்துகின்றன.

தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில், 100-க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்பிலான பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும் இதில், மூலிகைத் திருவிழா, பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்படுவதுடன், கோளரங்கம், தொலைநோக்கி ஆகியனவும் அமைக்கப்படும். தினசரி பகல் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும், மாலையில் எழுத்தாளர்கள் சந்திப்பு, அறிஞர்களின் சிறப்புரை, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறும் என்றார்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

UAE Grupo SanJose நிறுவனத்தில் Senior MEP Project Engineer வேலை வாய்ப்பு!!

No comments :

Senior MEP Project Engineer

Grupo SanJose

UAE

Posted 6 days ago 
Ref: NP322-60









The Role

- Advise the MEP project manager of any technical aspects of the MEP services that may affect construction progress, quality and the like.
- Continually review the contractor’s construction schedule during the progress of site works. 
- Review Contractor’s installation method statements.
- Review Contractor’s shop drawings against the design [tender] drawings for compliance with the design intent and return to project manager with appropriate comments / approval.
- Review contractor’s MEP shop drawing in conjunction with the structural and electrical engineers to ensure engineering co-ordination and advise MEP project manager accordingly 
- Review Contractor’s MEP services material proposals against specified technical performance requirements and advise the MEP Project Manager on the appropriateness of the proposals. 
- Review Contractor’s proposed subcontractor(s) associated with the structural engineering works from a technical standpoint. 
- Undertake general project site observation / inspection of the MEP services works for Contractor’s adherence to the approved shop drawings and Consultant’s specification, good working practices, the construction schedule and health & safety. 
- Undertake prior review of Contractor’s proposed MEP system testing & commissioning methods and schedule
- Review and comment on Contractor’s testing and commissioning results and advise MEP Project Manager accordingly
- Prepare on-going list of MEP services defects for contractor’s remedial action. 
- Undertake final project snagging and prepare list of defects for Contractor’s action.
- Attend project, site progress and any MEP services related technical meetings as directed by the MEP project manager. 
- Prepare draft site / engineer’s instructions, relating to the building mechanical services, as required and issue to the MEP Project Manager. 
- Provide advice to the Project Manager in regard to any mechanical services related variation costs that may be claimed by the Contractor during the course of the works.
- Review and comment upon Contractors Operation and Maintenance manuals

Requirements

- Bachelor’s Degree in Electrical Engineering
- 5-10 years’ professional experience. UAE/GCC/Middle East is a plus.
- Good command in English, both written and spoken. Arabic is a plus.
- Significant relevant experience on site, ideally on large scale projects in the Middle East.

About the Company

SANJOSE is a listed, robust and diversified business Group. It carries out its activity in several countries in Europe, America and Africa through its main business lines:
SANJOSE Construction SANJOSE Real Estate SANJOSE Energy and Environment SANJOSE Concessions and Services
With a turnover of EUR 752 million in 2011, SANJOSE is characterised by financial strength, competitiveness, innovation, participation in the development and implementation of unique projects and its high-technology training.
The structure of its internal organisation is distinguished by its flexibility, dynamism, expertise and ability to adapt to customer needs and the market characteristics where it operates.
TO APPLY: CLICK HERE

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)