முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, September 2, 2015

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம், புதிய பேருந்து நிலையம் மற்றும் இரண்டு நகராட்சி பள்ளிகளில் R.O.பிளாண்ட்!!

No comments :
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் இரண்டு நகராட்சி பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (ஆர்.ஓ.பிளாண்ட்) அமைக்க நகராட்சி  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சந்தானலெட்சுமி தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் கவிதா, நகராட்சி கமிஷனர் முகம்மது சிராஜ் முன்னிலை வகித்தனர். நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி  ஊரணிகளான சாயக்கார ஊரணி, கொடலைக்கார ஊரணி, குண்டூரணி, கருவேப்பிலைக்கார ஊரணி, வண்ணார் ஊரணி மற்றும் நீலகண்டி ஊரணிகள் தூர்வாரப்பட்டுள்ளதால், ஊரணிகளை சுற்றி தடுப்பு வேலி அமைப்பதற்கும், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் இந்திரா நகரில் வீடற்றவர்களுக்கு  ரூ. 25 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டவும், நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளியில் ரூ.5.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தில் கம்ப்யூட்டர் புரொஜெக்டர், மாணவர்கள் படிக்க திறந்தவெளி அரங்கம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப் பள்ளி, எம்.எஸ்.கே தொடக்கப் பள்ளி, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் குடிநீர் சுத்திகரிப்புநிலையம் (ஆர்.ஓ.பிளாண்ட்) ரூ.6.50 லட்சம் செலவில் அமைக்கவும் மற்றும் நகராட்சி பகுதியில் பொது சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிப்  பணிகள், நகராட்சி பணிகளுக்கு ஆட்கள் நியமனம், நகராட்சி வாகனங்கள் பழுது நீக்குதல், குப்பை அள்ள வாகனங்கள் அமர்த்துதல் உள்ளிட்ட 86 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் 27வது வார்டு கவுன்சிலர் தனசேகரன் (அதிமுக), சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் தளம் 
அமைத்தல் பணி, புதிய பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை மராமத்து பணிகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மன்ற அனுமதி பெறுவதற்கு முன்பே, நகராட்சி தலைவரின் முன் அனுமதியடன் முன்கூட்டியே ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். 

2வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்(சுயேட்சை), புதிய பேருந்து நிலையம், நகராட்சி பள்ளிகளில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட சில 

பணிகளுக்கு மன்ற அனுமதி பெறுவதற்கு முன்பே, முன்கூட்டியே நகராட்சி தலைவரின் முன் அனுமதியடன் ஒப்பந்தப்புள்ளி கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பேசினார். இதற்கு அதிமுக கவுன்சிலர் சீனிவாசன் பதிலளித்தார், நகராட்சி அதிகாரிகள்தான் பதில் தெரிவிக்க வேண்டும். கவுன்சிலர் பதில் தெரிவிக்கக் கூடாது  என செந்தில்குமார் தெரிவித்தார். 

அதனால் கூட்டத்தில் சற்றுநேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர் சீனிவாசன், நகராட்சி பகுதிகளில் 
அதிகமானோர் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருடுகின்றனர். இதனால் பெரும்பாலான வீடுகளுக்கு குடிநீர் வருவதில்லை நடவடிக்கை எடுக்க வேண்டும் 

என்றார்.நகராட்சி கமிஷனர், மின்மோட்டாரை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறிபயன்படுத்துவோரது மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் என செய்தித்  தாள்களில் அறிவிக்கை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து திடீர் சோதனை செய்து மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும்என்றார். 

செய்தி: தினசரிகள் வழி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!!

No comments :
ஏர்வாடி தர்காவின் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவுக்கு உள்பட்ட ஏர்வாடியில் உள்ள செய்யது அபுபக்கர் பாதுஷா நாயகத்தின் சந்தனக்கூடு திருவிழா வரும் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 


இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்தும்,         அதனை ஈடு செய்யும் பொருட்டு வரும் 19.9.2015 அன்று சனிக்கிழமை பணிநாளாகக் கருதப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அன்றைய தினம் செயல்பட வேண்டும்.


 இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வரும் 8.9.2015 அன்று ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அரசு அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)