முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 6, 2016

அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு!!?

No comments :
அதிமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவு!!


செய்தி: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பிச்சைக்காரன் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
நடிகர்கள்: விஜய் ஆன்டனி, சாதனா டைட்டஸ்
ஒளிப்பதிவு: பிரசன்ன குமார்
இசை: விஜய் ஆன்டனி
தயாரிப்பு: ஃபாத்திமா விஜய் ஆன்டனி
இயக்கம்: சசி


தலைப்பில் சென்டிமென்ட் பார்க்கும் கோடம்பாக்கத்தில் முதல் முறையாக அதை உடைத்துபுதிய ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார் விஜய் ஆன்டனி. தலைப்பில் உள்ள இந்த புதுமை படத்தில் தொடர்கிறதா... பார்க்கலாம். கதை...சொல்ல எளிமையானது. ஆனால் எடுக்க ரொம்பவே சவாலானது. அந்த சவாலை சரியாகவே சமாளித்திருக்கிறார் இயக்குநர் சசியும் அவரது ஹீரோ விஜய் ஆன்டனியும்.
கோடீஸ்வரர் மகன் விஜய் ஆன்டனி. அப்பா இல்லை. எல்லாமே அம்மாதான் என்றிருப்பவருக்கு பேரிடியாக ஒரு நாள் அவரது அம்மாவுக்கு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்குப் போய்விடுகிறார். செய்யாத வைத்தியமில்லை. அப்போதுதான் சாமியார் ஒருவர் 'அம்மா சரியாக வேண்டுமென்றால்நீ 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழ வேண்டும். உன் அடையாளம் தெரியக்கூடாது,' என்று கூறஅதை ஏற்று பிச்சைக்காரனாகிறார் விஜய் ஆன்டனி.




இதில் அவர் சந்திக்கிற பிரச்சினைகள், அவற்றைச் சமாளித்து அம்மாவுக்காக ஒரு மண்டல பிச்சைக்கார விரதத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது மீதி. மேலோட்டமாகப் பார்த்தால் லக்கிமேன் டைப் கதைதான். ஆனால் இந்தக் கதைக்கு இயக்குநர் சசி கொடுத்திருக்கும் ட்ரீட்மென்ட் பாக்யராஜின் புத்திசாலித்தனத்துக்கு இணையானது.

விஜய் ஆன்டனி நடிப்பில் படத்துக்குப் படம் பக்குவம் கூடுகிறது. இந்தப் படத்தில் அம்மாவுக்கு பாசமான மகனாக, கோடீஸ்வர இளைஞனாக, ஒரு அசல் பிச்சைக்காரனாக... வாழ்ந்து காட்டியிருக்கிறார். இதுவரை அவரது நடிப்பில் வந்த படங்களில் பிச்சைக்காரனுக்கு சந்தேகமில்லாமல் முதலிடம் தரலாம். அழகு நடிப்பு இரண்டிலுமே குறை சொல்லமுடியாத நாயகி சாதனா டைடஸ்.

அம்மாவாக நடித்திருக்கும் தீபாவும், பெரியப்பாவாக வரும் முத்துராமனும் ஏற்ற வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். பகவதி பெருமாள், மூர்த்தி ஆகியோர் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்கள். ஆரம்ப காட்சிகளில் ரொம்பவே ஆமை வேகம். விஜய் ஆன்டனியின் உபதேசங்கள், சாமியார் சொல்லும் பரிகாரக் காட்சிகள் எல்லாம் படத்தை வஞ்சிக் கோட்டை வாலிபன் காலத்துக்கு கொண்டுபோவது போன்ற பிரமை.

படத்தின் முக்கிய ப்ளஸ் சசியின் வசனங்கள். 'ஏந்தற கைக்கு, ஓங்கற பழக்கம் வராது' ஒரு பருக்கைப் பதம். பிரசன்னாவின் ஒளிப்பதிவும் விஜய் ஆன்டனியின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலங்கள். பெயரில்தான் பிச்சைக்காரன். தரத்தில் கோடீஸ்வரனாக இல்லாவிட்டாலும் லட்சாதிபதியாக நிறைக்கிறான்!

விமர்சனம்: ஒண் இண்டியா

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் 125 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 125 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.நடராஜன் சனிக்கிழமை பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.நடராஜன் தலைமை வகித்து பேசியதாவது:  ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, முதுகுளத்தூர், பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் என 4 தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 1307 வாக்குச் சாவடிகளில் 125 வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணைய விதிகளின் படி பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தேர்தலில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க 12 பறக்கும்படைகளும், 12 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவை செயல்படும். ஒலி பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதிகாலை 6 மணிக்கு முன்பாகவோ அல்லது இரவு 10 மணிக்கு பின்பாகவோ அனுமதியின்றி எவ்வித தேர்தல் பிரசாரமும் செய்யக் கூடாது. சாதி, மத, இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது.
 தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்துக்கோ, தேர்தல் பார்வையாளர்களுக்கோ அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரிக்கோ தெரிவிக்கலாம் என்றார் அவர்.

கூட்டத்துக்கு, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மணிவண்ணன், ஊரக வளர்ச்சித் திட்ட முகமை திட்ட அலுவலர் பழனி, கோட்டாட்சியர்கள் ராம்பிரதீபன் (ராமநாதபுரம்), சு.சமீரன் (பரமக்குடி) உள்பட அனைத்துத் துறை அதிகாரிகள், அனைத்து கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)