முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 6, 2016

விபத்தில் பாதிக்கப்படுவோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் அனுமதிக்க கோரிக்கை!!

No comments :

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்துகளால் பாதிக்கப்படுவோரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுமதிக்க வேண்டும் என விபத்து மீட்பு அறக்கட்டளையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் வி.ராஜேந்திரன் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: 

மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்தின்போது, காவல்துறை உதவியுடன், விபத்து மீட்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளை பாதுகாத்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பது, ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற சேவையை செய்து வருகிறோம்.

பரமக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கருவிகள் ஏதும் இல்லாத நிலையில் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மணி நேரத்தில் ஸ்கேன் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலையில் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கவும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் நவ.7 முதல் 14 வரை மின் விநியோகம் தடைபடும் இடங்களின் விபரம்!!

No comments :
ராமநாதபுரம் நகர் பகுதிகளில் மறுசீரமைக்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட மின்வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் திங்கள்கிழமை முதல் 14 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

நவ.7 மற்றும் நவ.10 ஆகிய தேதிகளில் சாலைத்தெரு, அக்ரஹாரம் ரோடு, வடக்குத் தெரு, அரண்மனை பகுதிகள், கோட்டைமேடு, கே.கே.நகர், சூரன்கோட்டை காலனி.

நவ.8. வண்டிக்காரத்தெரு, ஸ்ரீவழிவிடு முருகன் கோயில், சதக் சென்டர், புதிய பேருந்து நிலையம், ஜெகன் தியேட்டர், சந்தைக்கடை, வள்ளல் பாரி தெரு,ந கராட்சி மற்றும் தாலுகா அலுவலக பகுதிகள்.

நவ.11 வசந்தநகர், தாயுமானவர் சுவாமி கோயில் தெரு, இந்திரா நகர், சிகில் ராஜவீதி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தெரு, நவ.12. மற்றும் நவ.14 ஆகிய தேதிகளில் சிங்காரத்தோப்பு, வடக்குத்தெரு, கொத்த தெரு, மூலக்கொத்தலம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், கே.கே.நகர், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி, சூரங்கோட்டை காலனி, சாலைத்தெரு, கே.கே.நகர், அக்ரஹாரம், அரண்மனைப் பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)