முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, November 22, 2016

பழைய 500,1000 ரூபாய்க்கு பதிலாக புதிய நோட்டுக்களை கிராமங்களுக்கு நேரில் சென்று வழங்கும் மாவட்ட அஞ்சல்துறை!!

No comments :

ராமநாதபுரத்தில் பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்படாத நிலையில் பணம் எடுக்க வங்கி முன்பு பொதுமக்கள் நீண்ட வரிசை நின்கின்றனர். 

ராமநாதபுரத்தில் கடந்த 13 நாட்களாக பெரும்பாலான ஏடிஎம்கள் திறக்கப்பட வில்லை. திறந்திருக்கும் ஏடிஎம்களில் போதிய பணம் வைக்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்கள் வங்கியில் நீண்ட வரிசையில் நின்றே பணம் எடுத்து வருகின்றனர். பெரும்பாலான வங்கிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. வெயிலில் பலமணி நேரம் காத்திருந்து பணம் எடுத்தாலும் அது அத்தியாவசிய செலவுகளுக்கு போதாத நிலையாக உள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.



இதுகுறித்து கூலி தொழிலாளி கூறுகையில், 500, 1000 ரூபாய்களை மாற்ற தினசரி வங்கிகள் முன்பு பல மணி நேரம் காத்து இருக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் வங்கி வாசலில் நிற்க வேண்டியுள்ளதால் கூலி வேலைக்கு கூட செல்ல முடியவில்லை. பணத்தை வங்கியில் மாற்றினாலும் 2 ஆயிரம் நோட்டை கடைகளில் மாற்ற முடியவில்லை. ரூ.200க்கு பொருட்கள் வாங்கினால் கூட மீதி ஆயிரத்து 800ஐ தர கடை உரிமையாளர்கள் மறுக்கின்றனர்.

களத்தில் இறங்கிய அஞ்சல்துறை பாம்பன் கடலோர பகுதியில் அமைந்துள்ள சின்னப்பாலம், குந்துகால், அக்காள்மடம் கிராமங்களுக்கு நேற்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உதயசிங் தலைமையில் ஊழியர்கள் சென்றனர்.  அவர்கள் மீனவர்களிடம் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டை பெற்றுக்கொண்டு புதிய ரூ.2000 நோட்டை வழங்கினர். மூன்று கிராமங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை தொழில்கடன் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 35 சதவிகித மானியத்தில் ரூ.25 லட்சம் வரை தொழில்கடன் வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அனைத்துப்பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கல்வித்தகுதியோ அல்லது வயது வரம்போ கிடையாது. வருமான உச்சவரம்பும் இல்லை.

உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க அரசு மானியத்துடன் வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிக பட்ச திட்டத் தொகையாக ரூ.25 லட்சம் எனவும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.10லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தொடர்பான தொழில்களுக்கு ரூ.10லட்சம் மற்றும் சேவைத் தொழில்களுக்கு ரூ.5 லட்சத்திற்கு மேலும் கடனுதவி பெற விரும்புபவர்களுக்கு மட்டும் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 18 வயது நிரம்பியவர்களாகவும் இருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினராக இருந்து நகர்ப்பு புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் கடன் தொகையில் 15 சதவிகித மானியமும் ஊரகப் பகுதியில் தொழில் தொடங்கும் பகுதியில் 25 சதவகிதமும் மானியமும் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படை வீரர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புறத்தில் தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு திட்ட மதிப்பீட்டுத் தொகையில் 25 சதவிகித மானியமும், ஊரகப் பகுதியில் தொழில் தொடங்குவோருக்கு 35 சதவிகித மானியமும் வழஙகப்படும்.

முந்திரி பதப்படுத்துதல், சிறு தானியங்களிலிருந்து உணவுப் பொருள்கள் தயாரித்தல், தென்னை நார் கயிறு, துகள் கட்டிகள் தயாரித்தல், கேக் மற்றும் பிஸ்கட் தயாரிப்பு, உணவுப் பொருள்கள் தயாரிப்பு, இரும்பு பர்னிச்சர் தயாரிப்பு, நோட்டுப் புத்தகங்கள், ஆயத்த ஆடைகள், அட்டைப் பெட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட தொழில் தொடங்க இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு 04567-230497 என்ற எண்ணிலோ அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டத் தொழில் மைய வளாகத்தை தொடர்பு கொள்ளலாம்.


இது தவிர ​‌w‌w‌w.k‌v‌i​c‌o‌n‌l‌i‌n‌e.‌g‌o‌v.‌i‌nஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து விண்ணப்ப நகலை மாவட்ட தொழில் மையத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறும் ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)