முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 11, 2017

சென்னை-இராமேஸ்வர ரயில் நேர மாற்றம்!!

No comments :
சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7.25க்கு இராமநாதபுரம் வந்து, 9.15க்கு ராமேஸ்வரம் சென்றடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள அட்டவனையைப்பார்க்க



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மதுரையில் நாளை(பிப்.,12) மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கருணை அறக்கட்டளை சார்பில் நாளை(பிப்.,12) வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
மாநிலங்களவை உருப்பினர் திருமதி. கனிமொழி துவங்கி வைக்கிறார்.

காலை 9:00 மணிக்கு துவங்கும் இம்முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல், கலைக் கல்லுாரிகளில் படித்த அனைத்து பிரிவினரும் பங்கேற்கலாம். 


25 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தேர்வானவர்களுக்கு உடனடியாக வேலை உறுதி சான்றிதழ் அளிக்கப்படும்.


முகாமில் பங்கேற்க வருபவர்கள் கல்வி சான்றிதழ்கள் நகல், முகவரி சான்றிதழ், போட்டோவுடன் வர வேண்டும் என அறக்கட்டளை நிறுவனர் இளமகிழன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் கிரிக்கெட் அணிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி வீரர்கள் தேர்வு!!

No comments :
மாநில அளவிலான 14 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ராமநாதபுரம் அணிக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி வீரர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கே.டி.பிரபாகரன் வியாழக்கிழமை கூறியதாவது: 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் ஜூன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. 

இதில் 1.9.2003 ஆம் தேதியோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தேர்வின் போது சிறப்பாக செயல்படுவோர் ராமநாதபுரம் மாவட்ட அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்றார்.

பேட்டியின் போது கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்றுநர் கபிலன் உள்ளிட்ட மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர மாவட்ட பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க பிப்ரவரி 15க்குள் பதிவு செய்யவும்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற உள்ள பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் இ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில், கருத்தரங்குகள், கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழா, தெருமுனைப் பிரசார இயக்கங்கள் மற்றும் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியருக்கிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளன.

எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும்
கல்வியும் சமூக நீதியும் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும் ராமநாதபுரம் சர்ச் ஸ்டாப் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் பிப்ரவரி 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.  

இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வரும் 15 ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் கல்வி கற்கும் கல்லூரி மூலம் 
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் இ.பாலகிருஷ்ணன், வ.உ.சி.நகர்
ராமநாதபுரம்- 623503 

என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர்.

பேச்சுப் போட்டியில் பங்கேற்போருக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்படும். ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரிக்கு ஒருவர் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர் 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். ஒரு மணி நேரம் மட்டுமே கட்டுரைப் போட்டி நடத்தப்படும். போட்டியில் பங்கேற்போருக்குரிய தாள்களை அறிவியல் இயக்கமே வழங்கும்.

போட்டியில் பங்கேற்போருக்கு பயணப்படி, மதியஉணவு ஆகியன வழங்கப்பட மாட்டாது. 

இப்போட்டியில் பொறியியல், மருத்துவம், கல்வியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். 

மேலும் விவரங்களுக்கு 9486573129 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்!!

No comments :
ராமநாதபுரம் ரயில்வே பீடர் சாலையில் உள்ள போக்கஸ் அகாதெமி நிறுவனத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் தொடங்குகிறது.

 இம்முகாமில் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாடப் புத்தகங்கள், நேர மேலாண்மை மற்றும் திட்டமிடுதல் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும் தேர்வர்களுக்கு பாடக்குறிப்புகளும் வழங்கப்படுவதுடன், மாதிரித் தேர்வும் நடத்தப்படும். 

இப்பயிற்சி முகாமில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு தேர்வுகள் குறித்து விளக்கமளிப்பார்கள். 

எனவே தகுதியுள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களுடன் வலம்புரி மகாலில் செயல்பட்டு வரும் போக்கஸ் அகாதெமி நிறுவனத்தில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு 9159991214 மற்றும் 9842360361 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)