முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 30, 2017

ஏர்வாடியில் மின் கட்டண வசூல் மையம் கேட்டு மனு!!

No comments :
ஏர்வாடியில் மின் கட்டண வசூல் மையம் கேட்டு தலைமை பொறியாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஏர்வாடி மற்றும் ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் 7ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இவர்கள் அனைவரும் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏர்வாடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உத்திரகோசமங்கைக்கு செல்ல வேண்டியுள்ளது. மேலும் உத்திரகோசமங்கைக்கு ஏர்வாடியிலிருந்து சரியான பஸ் வசதி இல்லை. ஆகவே 100 ரூபாய் மின் கட்டணம் செலுத்துவதற்கு ரூ.300 ஆட்டோவுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஆகவே கீழக்கரையில் உள்ளது போல் ஏர்வாடியில் அமைக்கப்பட்டு வரும் உப மின் நிலையத்திலேயே. மின் கட்டணம் வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி மதுரை தலைமை பொறியாளர் நல்லம்மாளிடம் ஏர்வாடி மக்கள் நல சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

மாடித்தோட்டங்களை அமைக்க தோட்டக்கலைத் துறையினர் தீவிரம்!!

No comments :
வறட்சியால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வீடுகளில் விளைவிக்கும் வகையில் மாடித்தோட்டங்களை அமைக்க தோட்டக்கலைத் துறையினர் தீவிரம் காட்டுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் எக்டேரில் குண்டு மிளகாய், கொத்தமல்லி, நன்னீர் கிடைக்கும் இடங்களில் மா, கொய்யா, சாப்போட்டா போன்றவை சாகுபடி செய்ய தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கமுதி உட்பட நன்னீர் கிடைக்கும் இடங்களில் மா, கொய்யா, சப்போட்டா சாகுபடிக்கு அரசு மானியம் வழங்கப்படுகிறது.


இந்தாண்டு பருவ மழை பொய்த்ததால் பயிர் சாகுபடியே நடக்கவில்லை. நெல் சாகுபடி முற்றிலும் இல்லை.

15 ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்ட குண்டு மிளகாயும் பாதிப்பிற்குள்ளானது.

இந்நிலையில், மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே வீடுகளில் விளைவிக்க ஏதுவாக 'மாடித்தோட்டம் திட்டம்' தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகராட்சிகளில் தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது. 

இதை மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் இத்திட்டத்தில் வீடுகளில் மாடித்தோட்டங்களை அமைப்பது குறித்து, கலெக்டர் நடராஜன் தலைமையில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தமிழ்வேந்தன், உதவி இயக்குனர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர்.

தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் 3000 'கிட்டுகள்' வழங்கப்படவுள்ளன. ஒரு 'கிட்' விலை 300 ரூபாய். இதில் மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு குடும்பத்திற்கு ஐந்து 'கிட்டுகள்' வரை வழங்கப்படும். 

அவர்கள், அந்த 'கிட்டுகளை' பயன்படுத்தி கத்தரி, தக்காளி, வெண்டை குறிப்பாக கீரை வகைகளை பயிரிட்டு பயன்பெறலாம். பயிரிட்ட சில நாட்களில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பெற முடியும்.

ஏப்., முதல்வாரம் முறைப்படி இத்திட்டம் துவக்கி வைக்கப்படவுள்ளது, என்றார். 


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)