முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 26, 2017

ஆதார் அட்டையில் பெயர், முகவரி திருத்தங்கள் மேற்கொள்ள இ-சேவை மையங்களை அணுகலாம்!!

No comments :
ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின் தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையங்களை அணுகலாம் என்று மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம்மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால்இந்த மையங்களுக்கு சென்று கைரேகை அல்லது கருவிழியினை பதிவு செய்து தங்களது பெயர்பிறந்த தேதிமுகவரிகைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம்.



மேலும் புகைப்படம், கைவிரல் ரேகை, மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம். ஆதார் பதிவு, 5 முதல் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்வதற்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்கு ரூ.25-ம், புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25-ம், ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10-ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக கடை அடைப்பு போராட்டம், இராமநாதபுரத்தில் 41 பேர் கைது!!

No comments :
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தின் போது, மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
நிவாரண தொகை வழங்குவது
வங்கி கடனை ரத்து செய்ய கோருவது 

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத் தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நேற்று ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்களை நடத்தி கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில், நகர் செயலாளர் கார்மேகம், முன்னாள் கவுன்சிலர் அய்யனார், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் சாதுல்லாகான் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து ஒரு பெண் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர். சாயல்குடி பகுதியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், நகர் செயலாளர் வெங்கடேஷ்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி ஆகியோர் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 41 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பான நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாரிராஜன், ஆர்ட் கணேசன், துணை தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் விஜயன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தினை சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தாராம் தலைமையில் முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் முன்னோடி வங்கியை முற்றுகையிட முயன்றபோது ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராதா தலைமையில் 4 பெண்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். கடலாடி தேவர் சிலை பகுதியில் கடலாடி ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்ற 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

நன்றி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)