முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 9, 2017

அரியமானுக்கு பஸ் வசதி கோரும் சுற்றுலா வாசிகள்!!

No comments :

ராமேஸ்வரம் சுற்றுலாதலமாக உள்ளதால்ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தற்போது கோடை விடுமுறை காரணமாக உச்சிப்புளி அருகேயுள்ள அரியமான் கடற்கரைக்கு வேன்களிலும் வாடகை கார்களிலும் சென்று கடற்கரையில் குளித்து இளைப்பாறி செல்கின்றனர்.
இதனால் தினமும் கடற்கரை கோலாகலமாக உள்ளது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடி சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றனர். இதுதவிர படகு சவாரி செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.




இந்நிலையில் உச்சிப்புளி முதல் ராமேஸ்வரம் வரை குறைந்த அளவிலான டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அரியமான் கடற்கரைக்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ தூரம் செல்ல வேண்டும். டவுன் பஸ்களும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அப்பகுதியில் 3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையும் தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. பயணிகளின் நலன் கருதி கோடை விடுமுறையில் மட்டும் காலை, மாலை நேரங்களில் அரசு டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரம் மத்ரசாவில் குர்ஆன் ஓதும் போட்டி!!

No comments :


ராமேஸ்வரத்தில் இஸ்லாமிய சிறுவர்கள் குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்றது.

ராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசல் வளாகத்தில் அன்னை பாத்திமா நிஸ்வான் மத்ரசா சார்பில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு இதன் தலைவர் ஜான்பாய் தலைமை வகித்தார். முஸ்லீம் ஜமாத் தலைவர் அப்துல்ஹமீது முன்னிலை வகித்தார். ராமேஸ்வரம் பள்ளிவாசல் பேஷ் இமாம் அப்துல்ரகுமான்செயலாளர் அப்துல்கலாம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட குர்ஆன் ஓதும் போட்டி, கிராஅத்போட்டி, பேச்சுப்போட்டி, உரையாடல் மற்றும் கேள்வி-பதில் போட்டியில் ஏராளமான சிறுவர்கள் பங்கேற்றனர்.


வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு ஜமாத் சார்பில் பரிசு வழங்கப்பட்டது. அவுரங்கசீப் நன்றி தெரிவித்தார். முஸ்லீம் ஜமாத்தார்கள், பெண்கள் என ஏராளாமானவர்கள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

சென்னையில் மே13ம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!!

No comments :
Diploma., Engineering ., arts & science படித்த  மாணவர்களுக்கு மெகா வேலை வாய்ப்பு முகாம் - 13 May 2017 !!

முன்பதிவு அவசியம். பதிவு செய்ய: goo.gl/tewJKg



2014, 2015, 2016
மற்றும் 2017 ஆம் கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த மாணவர்கள், இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் பயன்பெறலாம்.

VV College of Engineering நடத்தும் மெகா வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொண்டு தொழில் துறையில் சிறந்த, பெரிய நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பைப் பெறுங்கள்.
பங்கு பெரும் நிறுவனங்கள்:

- Delphi TVS
- Aaahaa
- Aegis
- Aqua Pure
- Datalogics India
- HCL
- Dhonadhi Hitech
- Grupo Antolin
- IDBI Federal
- Paragon Digital
- Ramsays Corp
- SP Staffing
- Talent Pro
- Hexaware
- Equitas
- Gamma
- Tekbos
- Vega IntelliSoft

மேலும் பல...

இலவச பேருந்து வசதி உண்டு.


மேலும் விபரங்களுக்கு: www.vvcoe.org/campus

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் பாதள சாக்கடை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரிக்கை!!

No comments :


ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சுகாதார சீர்கேடு இருந்து வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நகர மக்களின் நீண்டகால வேண்டுகோளை ஏற்று அரசு பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்தது. 



தற்போது இத்திட்டம் மூலம் வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்டவைகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு குடியிருப்புகளுக்கு முழுமையாக இணைப்பு அளிக்கப்படவில்லை. இதனால் பல தெருக்களில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைபட்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதிகாரிகள் நகரில் கழிவுநீர் சேராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், இணைப்பு இல்லாத தெருக்களில் முழுமையாக இணைப்பு ஏற்படுத்தவும் ஆவண செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)