முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 7, 2024

+2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.89 சதவீத தேர்ச்சி!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 17வது இடம் பிடித்துள்ளனர். 

 

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைந்தது.

 


ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில், 63 மையங்களில்

71 அரசு மேல்நிலைப் பள்ளிகள்,

36 அரசு உதவி பெறும் பள்ளிகள்,

53 மெட்ரிக் பள்ளிகள்,

ராமநாதபுரம் மாதிரி பள்ளி ஒன்று

 

என 161 பள்ளிகளிலிருந்து 6,302 மாணவர்களும், 7,247 மாணவிகளும் என மொத்தம் 13,549 பேர் தேர்வு எழுதினர்.

 

இந்நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வந்த நிலையில் 5,850 மாணவர்கள், 7,007 மாணவிகள் என 12,857 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

இதில் மாணவர்கள் 92.83 சதவீதம், மாணவிகள் 96.69 சதவீதம் என மொத்தம் 94.89 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

 

இதில் 71 அரசு மேல்நிலை பள்ளிகளில் 19 பள்ளிகள், 36 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 பள்ளிகளும், 53 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37 பள்ளிகள் என மொத்தமுள்ள 161 பள்ளிகளில் 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, May 2, 2024

மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றுபவர்கள் முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த விருது ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும்.

15 முதல் 35 வயது வரை உள்ள தலா மூன்று ஆண், பெண்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும்.

 


2023--24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டும் பரிசீலிக்கப்படும். 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைதள முகவரியில்(www.sdat.tn.gov.in) விண்ணப்பங்களை மே 15 க்குள் சமர்பிக்க வேண்டும்.

விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு இளைஞர்நலன் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, March 11, 2024

சவுதி அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியின் வருடாந்திர வாலிபால் பேட்டி!!

No comments :

சவுதி அரேபியா ஜித்தா மாநகரில் அல் ஃபன்னியா (Alfaneyah) கம்பேனியில் வருடாந்திர வாலிபால் பேட்டி  கடந்த மார்ச் மாதம் 3,5 & 7 தேதிகளில் நடந்து முடிந்தது.

 

இதில் 6 அணிகள் கலந்து கொண்டது.

 

வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு வெற்றி கோப்பை, மெடல்கள், மற்றும் ரொக்க பரிசுகளை இந்த கம்பேனியின் இயக்குனர் SAS சதக்கத்துல்லா, மேலாளர்கள் சீனி அலி, மஹ்ரூப் அப்துல் காதர், நீயாசுதீன் மற்றும் அஸ்மாவில் ஆகியோர் வழங்கினார்கள்.

 

செய்தி: பயிற்சியாளர் ஹமீது ராஜா


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Tuesday, February 20, 2024

கீழக்கரை பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!!

No comments :

கீழக்கரை பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!!

 

பிப்.19-ம் தேதி கீழக்கரை முஹைத்தீனியா பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.

 

மாணவர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாணவர்களுக்கான இண்டராக்ட் கிளப் தொடங்கப்பட்டது.

 


இதையொட்டி கீழக்கரை ரோட்டரி சங்கம், கீழை கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி மையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி முதல்வர் அஸ்வத் உம்மா நன்றி கூறினார்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Monday, January 22, 2024

சவுதி அரேபியாவில் நடைபெற்ற கீழை-சவுதி அமைப்பின் மக்கள் ஒன்றுகூடல் நிகழ்வு!!

No comments :

கீழை சவுதி அமைப்பின் சார்பாக, கீழக்கரை மக்களின் ஒன்றுகூடல், சவுதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் சிறப்பாக நடந்தேறியது.

 
இந்த நிகழ்வில், அமைப்பின் கவுரவ தலைவர் ஜனாப்.முகைதீன் சீனி அலி அவர்கள் தலைமை வகிக்க, இதர உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

 

நிகழ்ச்சியை கீழை.இர்ஃபான் அவர்கள் கிராஅத் ஓத துவங்கி வைத்தார். முகைதீன் சீனி அலி அவர்கள் நமது அமைப்பின் நோக்கம் மற்றும் ஊர் மக்கள் ஒற்றுமை பற்றி தலைமையுரை ஆற்றினார்கள். ஜனாப்.தாஹிர் மற்றும ஜனாப்.ஆசிம் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினர்.

 


இதில் சவுதியில் மேற்கு மண்டலத்தில் பணிபுரியும் சகோதரர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் சிறந்த பாரம்பரிய மதிய உணவு வகைகளுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, November 1, 2023

ரோட்டரி கிளப் நடத்திய மாவட்டம் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்!!

No comments :

இராமநாதபுரம் மாவட்டம் அளவில் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் , ரோட்டரி கிளப் மூலம் நடைபெற்றது.

 வேலுமனோரன் பெண்கள் கலை கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் 14 வயது பிரிவில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியை சேர்ந்த 
H.Hameed Al Zehran ,6 ஆம் வகுப்பு, 3 வது இடம் பெற்றார்.

ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் அடிப்படையில் அவர் மூன்றாம் இடம் பெற்றார்.


 

இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் சேர்ந்த திரு. சுந்தரம் மற்றும் மருத்துவர் ராசிக்தீன் கலந்து கொண்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர்.

 

செய்தி: ஹமீது ராஜா, விளையாட்டு பயிற்சியாளர்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு!!

No comments :

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இந்த தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு மற்றும் பி.எட். முடித்திருக்க வேண்டும். மேலும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு 2-ம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Wednesday, October 18, 2023

கீழக்கரையில் நடைபெற்ற ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி!!

No comments :

முகமது சதக் அறக்கட்டளை மற்றும் VTeam இணைந்து 15.10.2023 அன்று கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில், பெண்களுக்கு இடையே விளையாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் ஓபன் மாவட்ட மகளிர் கைப்பந்துப் போட்டி நடந்தது.


 

முதல் இடம் - ஆர்.எஸ்.வி.சி., பரமக்குடி,10000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள்.

 2வது இடம் - வேலுமனோகரன் கல்லூரி,இராமநாதபுரம்,8000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள்.

 3வது இடம் -தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி ,கீழக்கரை 6000/- ரூபாய் மற்றும் கோப்பை,பதக்கங்கள்,சான்றிதழ்கள். 

 4வது இடம் - செய்யது அம்மாள் கல்லூரி,இராமநாதபுரம், 4000/- ரூபாய் மற்றும் சான்றிதழ்கள்.
 

சிறந்த கைப்பந்து நடுவர் விருது:

1.கார்த்தி, தமிழ்நாடு மாநில நடுவர்.

2. நாகூர்கனி, தமிழ்நாடு மாநில நடுவர்.

3. சாமுவேல், தமிழ்நாடு மாநில நடுவர். 

 

சிறந்த பயிற்சியாளர் விருது:

1. ஹமீத் ராஜா, ஜே.வி.சி,கிழக்கரை.

2. கார்த்தி, ஆர்எஸ்விபி, பரமக்குடி.

3. சுமதி, வேலுமனோகரன் கலைக் கல்லூரி, ராம்நாடு.

4. சவரி, செய்யது அம்மாள் கல்லூரி, ராம்நாடு. 

 


மேலும் சிறந்த 9 வீராங்கனைகளை  தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூபாய் 13000 வழங்கினார் Dr.P.R.L சதக் அப்துல் காதர்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, P.R.L சதக் அப்துல் காதர், S.S.A ஹுசைன் ஜலால், யூசுப் சாஹேப், S.M.Yஅஸ்லம் ஹுசைன், M.M.K முகமது காசிம் , M.M.K மொஹைதீன் இப்ராஹிம், ஷேக் உசேன், ESM பைசல், SMY சதக் ஆகியோர் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர்க்கு முகவை முரசு சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறோம்.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

Thursday, October 5, 2023

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நெடுந்தூர ஒட்டப்போட்டி!!

No comments :

மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இணையாக அண்ணா நெடுந்தூர ஒட்டப்போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 7-ந்தேதி நடத்தப்படுகிறது.

 

அதன்படி 2 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற உள்ளது.

 

ஆண்கள்

17 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் 8 கி.மீ,
5 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 கி.மீ,

 

பெண்கள்

17 முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் 5 கி.மீ,
25 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 கி.மீ.

தூரத்திற்கு நெடுந்தூர ஒட்டப்போட்டி நடத்தப்படும்.

இந்த போட்டிகள் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இ.சி.ஆர். சாலை பிரிவில் 7-ந்தேதி காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

 

போட்டியில் பங்குபெறும் அனைவரும் உடற்தகுதி குறித்து சுயஉறுதிமொழி படிவம் தரவேண்டும். 17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் வயது சான்றிதழ் பெற்று வர வேண்டும். ஆதார்கார்டு, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், ஆதார்கார்டு கொண்டு வர வேண்டும்.

 

இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5000, ரூ..3000, ரூ.2000


வீதமும் 4 முதல் 10-ம் இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்படும்.

 

இதில், கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழி படிவம் பூர்த்தி செய்திட மற்றும் வயது சான்றிதழ் சரிபார்ப்பதற்கு நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கிற்கு நேரில் வந்து பதிவுசெய்து கொள்ள வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

செய்தி: தினத்தந்தி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு admin@muhavaimurasu.in மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.