(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 18, 2015

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு மற்றொரு கெளரவம்

No comments :
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் சாதனை விருது வழங்கப்பட்டது.
இந்தியா முழுவதும் சிறந்து விளங்கும் 50 கல்வி நிறுவனங்களுக்கு அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் இ.எம்.சி. கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கல்வி சாதனையாளர் விருதை வழங்கிவருகிறது. 
தகுதி அடிப்படையிலும் மேகக் கணிமை தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்த மாணவர்களை கொண்ட கல்லூரி என்பதற்கு தலைமைத்துவம் என்னும் கல்வி சாதனையாளர் விருது முஹம்மது சதக் பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதை இ.எம்.சி. நிறுவன தலைமை நிர்வாகி வென்டி ஜான்சன் முன்னிலையில் சி.டி.எஸ்.நிறுவன துணை சேர்மன் லெட்சுமிநாராயணன் வழங்கினார். அந்த
விருதை கல்லூரி சார்பாக கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் பெற்றுக் கொண்டார்.

No comments :

Post a Comment