(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 5, 2015

என்னை அறிந்தால் - தமிழ்

No comments :
தொடர்ந்து இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள அஜித் மூன்றாவது வெற்றிபடமாக கொடுத்திருக்கும் படம் தான் என்னை அறிந்தால். நேர்மையான ஒவ்வொரு போலீஸ் அதிகாரிகளுக்கும் பின்னால் ஒரு பிளாஷ்பேக் கதை இருக்கும் அப்படித்தான் இந்த படத்தில் அஜித்தும்,
ஆரம்பபே ஆகாயத்தில் அறிமுகம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் சத்யதேவ்(அஜித்) அருகில் அமர்கிறார் தேன்மொழி(அனுஷ்கா). விமான பயணத்தை கண்டு பயந்து நடுங்கும் அனுஷ்கா துளிகூட பயம் இல்லாமல் அருகில் இருக்கும் தல அஜித்தை பார்க்கிறார். இவர்களது பயணம் நீண்ட தூரம் என்பதால் (அமெரிக்கா டு இந்தியா) இருவரும் ஒருவரையொருவர் அறிமுகபடுத்திக்கொள்கின்றனர்.
இந்தியா வந்தடையும் போது தேன்மொழிக்கு சத்யதேவ் மீது காதல், அவர்களது அடுத்த சந்திப்பில் தன் காதலை சொல்ல வருகையில் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறார்கள். அவர்களிடம் இருந்து தேன்மொழியை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். அவர்கள் ஏன் தாக்கினர், அதன் நோக்கம் என்ன என்பதை தேன்மொழி கேட்க ரீவைண்ட்……….
அங்க தான் நம்ம சின்ன தல அஜித்த பாக்குறோம், 12 வயதில் தன் தந்தையை இழந்த சத்யதேவ் எந்த பாதையில் செல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். பின்னர் ரகசிய போலீஸாக இருக்கும் அஜித்துக்கு விக்டர் (அருண்விஜய்) என்ற ரவுடி கும்பலை சேர்ந்தவரிடம் அறிமுகம் ஏற்படுகிறது, நாளடைவில் அது நட்பாக மாறுகிறது. ஆனால் தனது குறிகோளில் குறியாக இருக்கும் சத்யதேவ் அந்த ரவுடி கும்பலை போட்டுத்தள்ளுகிறார், விக்டர் மட்டும் தப்பிக்கிறார்.
இந்த எண்கவுண்டருக்கு பிறகு சத்யதேவ் சிறந்த போலீஸ் அதிகாரியாக மாறுகிறார், அப்போது தான் ஹேமாலினி(த்ரிஷா) என்ற பெண்னை பார்கிறார், பார்த்ததும் காதலில் விழுகிறார் சத்யதேவ். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது கணவர் இறந்துவிட்டார். நான்கு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலிக்கும் இவர்கள் காதலை திருமணமாக்க முடிவுசெய்கின்றனர்.
அங்கதான் விக்டர் ஆப்பு வைக்கிறார் ஹேமாலினியை போட்டுதள்ளுகிறார், திரும்ப எண்கவுண்டர் அவதாரம் எடுக்க நினைக்கும் சத்யதேவ் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் கொண்டு போலீஸ் வேலையில் இருந்து விழகி வாழ்ந்துவருகிறார். தன் குழந்தை கடத்தப்பட்டதையும், அதை கண்டுபிடிக்க உதவுவாறு நண்பர் கேட்க உதவமுன்வரும் சத்யதேவ் அதிர்ச்சியடைகிறார் காரணம் விக்டர் தான் இதை செய்தது.
அஜித் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அருண்விஜய்யை பிடித்தாரா…இல்லை தனது பகையை தீர்த்துகொண்டாரா…தேன்மொழியின் காதல் நிறைவேறியதா…அந்த குழந்தையின் நிலைமை என்ன ஆனது என்பது மீதிக்கதை.
வழக்கமான அஜித் படத்தில் இருந்து இந்த படம் சற்று வித்தியாசமானது என்று தான் சொல்ல வேண்டும், மாஸ் ஹீரோ என்பதை எல்லாம் தாண்டி இந்த படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரி, யதார்தமான காதலன், அன்பான அப்பா என அஜித் அசத்தியிருக்கிறார்.
அனுஷ்கா, த்ரிஷா இவர்கள் இருவருக்கும் தான் படத்தில் அட்டகாசமான கதாபாத்திரம் அதிலும் த்ரிஷா வெளுத்துகட்டுகிறார் நடிப்பில், விவேக் நாலைந்து பஞ்சுகளை பறக்கவிட்டிருக்கிறார்.
ஆர்யாவிற்கு எப்படி ஆரம்பம் ஒரு மறக்கமுடியாத படமோ, அப்படித்தான் அருண்விஜய்க்கு இந்த படம். அஜித்துடன் நட்பு பாராட்டும் போதும் சரி, அவரே தன் தலைவனை போட்டு தள்ளிய அஜித்தை போட்டுத்தள்ள துடிக்கும் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டுகிறார்.
ஹாரிஸ் ஜெய்ராஜ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது, பின்னனி இசை படத்திற்கு பலம் என்றாலும் அஜித்துக்குறிய மாஸ் இசை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து படங்களும் செம ஸ்டைலிஸ் கலந்த கிளாஸ் படமாக இருக்கும் என்பதை இதிலும் நிரூபித்திருக்கிறார். என்ன இது ஒரு கௌதம் மேனன் படம் என்று சொல்லும்படியாக தான் இருக்கிறதே தவிர இது தல படம் என்று சொல்லும்விதமாக இல்லை. முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது, இரண்டாம் பாதி சீறுகிறது.
மொத்தத்தில் (என்)னை அறிந்தால் உங்களுக்கு பிடிக்கும்.

நன்றி: நாளைய சினிமா.

No comments :

Post a Comment