(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 7, 2015

ராமநாதபுரத்தில் சப்–இன்ஸ்பெக் டர் தேர்வுக்கான இலவச பயிற்சி

No comments :
போலீஸ் சப்–இன்ஸ்பெக் டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடை பெற்று வருகிறது. 

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணித்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த 21–ந்தேதி முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடை பெற்று வருகிறது.  இந்த பயிற்சி வகுப்பில் எழுத்துத்தேர்வுக் கான பயிற்சிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், உடல் தகுதித் தேர்வுக்கான பயிற்சிகள் மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற்று வரு கிறது. இதனை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் ஆகியோர் பார்வை யிட்டனர்.  
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உடல் மற்றும் கல்வித்தகுதியுடைய விருப்பம் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூட்டரங்கில் உள்ள பயிற்சி ஒருங்கிணைப்பாளரிடம் நேரில் சென்று பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 

மேலும் விபரங்களை 8608682791 மற் றும் 9443882812 என்ற எண் ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

No comments :

Post a Comment