(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 8, 2015

கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் ஊட்டச் சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

No comments :
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் பெண்களுக்கான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் குணசேகரி, திருப்புல்லாணி ஒனறிய குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் தாஜூனிஷாபேகம், கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் மனை யியல் துறை பேராசிரியர்கள் முத்துமாரி, புவனேஷ்வரி, கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்த் ஆகியோர் பேசினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விமலி வரவேற்றார்.

குழந்தைகள், வளரிளம் பெண்கள், இளம் பெண்கள், முதியோர்களுக்கான உணவூட்டமுறை மற்றும் வளர்ச்சி குறித்து விளக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சத்தான உணவுகள், தானிய வகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்கள் குறித்த விளக்கக் குறும்படம் காண்பிக்கப்பட்டது. 
துரித உணவுகளால் ஏற்படும் தீங்குகளான அஜீரண கோளாறுகள், ஒவ்வாமை, குடல் நோய்கள், குடல் புற்று நோய்களின் அறிகுறிகள், விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டது. வைட்டமின், புரம், தாது உப்புகள் குறைபாடுகளால் ஏற்படும் குவாஷியார்க்கர், மராஸ்மஸ் போன்ற நோய்களும், ரத்தச்சோகை மற்றும் நீர்ச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கூறப்பட்டது. மாணவியரின் உணவூட்டம் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முகம்மது இபுராகீம் நன்றி கூறினார்.

No comments :

Post a Comment