(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 7, 2015

"வாட்ஸ்அப்பில் புகார் செய்யலாம்' காவல்துறையினர் துண்டு பிரசுரம்

No comments :
வாட்ஸ் ஆப் மூலம் புகார் செய்யும் வசதி குறித்த விவரங்கள் துண்டுபிரசுரங்களாக பொதுமக்களிடம் வியாழக்கிழமை மாவட்ட காவல்துறை சார்பில் தேவகோட்டையில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள், சந்தேகத்துக்கிடமான நபர்கள் நடமாட்டம் குறித்து உடனுக்குடன் மாவட்ட கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதியாக வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கும் திட்டத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் முகந்த் கோட்னீஸ் தொடங்கிவைத்தார். 9498101670 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளிக்கலாம்.
இந்த திட்டம் குறித்து தேவகோட்டை துணைக்கண்காணிப்பளர் கருப்பசாமி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, தேவிகா, சார்பு ஆய்வாளர்கள் சக்திவேல், சகாதேவன், கண்ணப்பன், புவனேஸ்வரி, போக்குவரத்து சார்பு ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், வாகனங்களில் ஐஎன்டி என பொருத்தப்பட்ட உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்தக்கூடாது என்றும் விளக்கப்பட்டது.

செய்தி; தினகரன்

No comments :

Post a Comment