Wednesday, February 25, 2015
தேவிபட்டினம் பள்ளி ஆண்டு விழா
தேவிபட்டினம் சாலையில் வெண்குளம்
கிராமத்தில் உள்ள ஷிபான் நூர் குளோபல் அகாதெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா
மற்றும் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு,
பள்ளியின் தாளாளர் டாக்டர் ஐ. மன்சூர்
தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி டாக்டர் நூருல்ஹவ்வா முன்னிலை வகித்தார்.
பள்ளியின் முதல்வர் விக்டர் ஞானராஜ்
வரவேற்றார்.
இதில், யோகா, கராத்தே ஆகிய கலைகளில் சாகசங்களை செய்து காட்டிய மாணவ,
மாணவியர்க்கு வேளாண்மைத் துறை துணை
இயக்குநர் இசட். கமாலுதீனும், பிரமிட் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்தியவர்களுக்கு
தேவிபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாகீர்ஹூசேனும் பரிசுகளை வழங்கினர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,
மாணவியர்க்கு வழக்குரைஞர் சுல்த்தான்
அப்துல்காதர் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
விழாவில், பள்ளியின் தனி அலுவலர் சீனிவாசன்,
நல்லாசிரியர் லியாகத் அலி,
ஐ.எஸ்.ஓ. ஆலோசகர் சாகுல்ஹமீது,
தமிழ்ச் சங்கத் தலைவர் மை. அப்துல்சலாம்
மற்றும் ரிபாய்கனி, இர்ஷாத் உள்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments :
Post a Comment