(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 24, 2015

எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள் - காப்பீட்டு திட்தத்தை நீட்டிப்பு செய்து தர வருவாய் அதிகாரியிடம் மனு

No comments :
தனியார் மருத்துவமனை களில் மருத்துவ காப் பீட்டு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி விசுவநாதன் தலை மையில் நடைபெற் றது. இந்த கூட்டத் தில் கலந்து கொண்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ராமநாதபுரத் தில் உள்ள தனியார் ஆஸ்பத் திரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப் பீட்டு திட்டத்தில் சிறுநீரக ரத்த சுத்திகரிப்பு மேற் கொண்டு வந்தோம். இந்த நிலையில் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் முடிவ டைந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.

படம்: தந்தி


அரசு ஆஸ்பத்திரியில் 2 சுத்திகரிப்பு எந்திரத்தின் மூலம் குறைந்தளவு நோயாளி களுக்கே ரத்த சுத்திகரிப்பு செய்ய முடிகிறது. இதன் கார ணமாக 40-க்கும் மேற்பட் டோர் மதுரையில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற் பட்டுள்ளது. எனவே தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து மருத்துவ காப் பீடு திட்டத்தின் கீழ் அனுமதி அளித்து ரத்த சுத்திகரிப்பு செய்ய உதவிட வேண்டும். மேலும், மாவட்டத்தில் கூடுத லாக தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த மருத்துவ காப் பீடு திட்டத்தின் கீழ் ரத்த சுத்திகரிப்பு அனுமதி வழங்க வேண்டும். இவ்வறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசா ரித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத்தரவிட்டார்.

No comments :

Post a Comment