(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, February 8, 2015

கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்டம்

No comments :
கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் நிறுவனர் பி.எஸ். அப்துர்ரஹ்மான் நினைவாக இந்த அனைத்து ஜமாஅத் கூட்டம் நடந்தது. இதற்கு நடுத்தெரு ஜமாஅத் தலைவர் கியாதுதீன் தலைமை வகித்தார்.
நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா, உதவித் தலைவர் ஹாஜாமுகைதீன், பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், மக்கள் சேவை அறக்கட்டளைத் தலைவர் உமர்அப்துல்காதர், கைராத்துன் ஜலாலியா பள்ளி தாளாளர் சாதிக், தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சி.எஸ்.ஐ. சர்ச் சபை குரு தேவதாஸ் ராஜன்பாபு, காங்கிரஸ் பிரமுகர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஹசன்அலி, த.மு.மு.க. தலைவர் சிராஜூதீன், விஸ்வகர்மா சங்கத் தலைவர் சி.கே. வேலன், எஸ்.டி.பி.ஐ. மாநில செயலர் அப்துல்ஹமீது ஆகியோர் இரங்கல் தெரிவித்து பேசினர்.

முன்னதாக அனைத்து ஜமாஅத் நிர்வாகி முகைதீன்தம்பி வரவேற்புரையாற்றினார். மேலும் இக்கூட்டத்தில் யூசுப் சுலைகா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர், உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்க செயலர் அப்துல்மாலிக், சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் சேக்தாவூத்கான், தங்கம் அப்துர் ரஹ்மான், செய்யது இபுராகீம், அப்பாஸ் ஆலிம், நகர் நல இயக்க பிரமுகர் சேக்பசீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இறுதியில் சீதக்காதி அறக்கட்டளை செயலர் காலித் ஏ.கே. புஹாரி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசு ஹாஜி காதர்பக்ஸ் ஹூசைன் துஆ செய்தார்

No comments :

Post a Comment