வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Thursday, February 26, 2015

மக்கள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு இராமேஸ்வரத்தில் மரம் நடு விழா

No comments :
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராமேசுவரம் திருக்கோயிலில் மரக்கன்று நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சேதுமாதவர் கோயில் அருகே மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் தலைமை வகித்தார். திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இதில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சுந்தரராஜன் வில்வ மரக்கன்றை நட்டு வைத்தார்.

ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், நகர்மன்ற உறுப்பினர்கள் நாகசாமி, மீனாட்சிசுந்தரம், கோயில் உதவிக்கோட்ட மேலாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரீன்ராஜ், கோயில் பேஷ்கார்கள் அண்ணாதுரை, ராதா, அண்ணா தொழிற்சங்கம் மின்சாரப் பிரிவு கோட்டச் செயலர் முருகேசன், அதிமுக நகர் செயலர் பெருமாள், அம்மா பேரவை செயலர் கஜேந்திரன் உள்பட அதிமுக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment