(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 21, 2015

சவூதி அரேபியாவில் ISF நடத்திய SDPI சிறப்பு நிகழ்ச்சி

No comments :
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) இன் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்களின் ரியாத் வருகையை முன்னிட்டு இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) ரியாத் தமிழ் மாநிலக்கமிட்டி வரவேற்ப்பு நிகழ்ச்சி மற்றும் தமிழ் பிரமுகர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சி கடந்த 18-02-2015, புதன்கிழமை மாலை 8:30 மணியளவில்,ரியாத் லீராயல் அரங்கில் நடைபெற்றது, இந்தியன் சோசியல் ஃபோரம், ரியாத் மத்தியக்கமிட்டி பொதுச்செயலாளர் ரமுஜுதீன் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து ஏற்ப்புரையாற்றிய SDPI மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் இந்தியாவின் கடந்த கால வரலாற்றையும் அதில் முஸ்லிம்களின் நிலைகளையும், நிகழ்கால அரசியல் மாற்றத்தையும் அதில் SDPI யின் களப்பணிகளையும் தெள்ளத்தெளிவாக பட்டியல் இட்டுக்காட்டினர்கள். SDPI யின் அரசியல் நிலைபாடுகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். இறுதியாக ISF ரியாத் தமிழ் மாநிலக்கமிட்டி பொதுச்செயலாளர் சர்தார் நன்றி நவிழ நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்தி; இந்தியன் சோசியல் போரம்

No comments :

Post a Comment