(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 21, 2015

ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகளில் தற்கொலை தாக்குதல் - 142 பேர் பலி

No comments :
ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 142 பேர் பலியாகியுள்ளனர்.
ஏமன் தலைநகர் சானாவின் தெற்கு பகுதியில் பத்ர், அல் ஹசாஹூர் மசூதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை. தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது அங்கு நுழைந்த தற்கொலை படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 142 பேர் பலியானதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மசூதி மீது பயங்கரவாத தாக்குதல் - 142 பேர் பலி!
மேலும் 300 க்கும் அதிகமனோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


No comments :

Post a Comment