(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, March 17, 2015

கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் வருட விளையாட்டுவிழா

No comments :
கீழக்கரை பேர்ல் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் 22 ம் வருட விளையாட்டுவிழா அந்த பள்ளியின் தாளாளர் ஜனாப ,சரிபா அஜீஸ் அவர்கள் தலைமையில் நடந்தது.


இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கீழக்கரை காவல் துனைகண் கானிப்பாளர் K.மகேஸ்வரி M.SC ( IT ), அவர்கள் கலந்துகொண்டார்கள். மற்றும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் சுமையா ,சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் ஜனாப் ,சேக் தாவூது,மற்றும் அப்பள்ளியின் முதல்வரும் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் மாணவர்களின் கராத்தே செய்துக்காட்டபட்டது,தேசிய அளவில் கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக கராத்தே பயிற்சி அளித்த பயிற்சியாளர் திரு.கண்ணன் அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியின் நிறைவாக அப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி  K.மகேஸ்வரி அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் அப்பள்ளியில் பனி புரியும் ஆசிரியையால் நன்றி கூறப்பட்டது.


செய்தி: கீழக்கரை மக்கள் நகர் நல இயக்கம்

No comments :

Post a Comment