Sunday, March 15, 2015
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் 27ஆம் ஆண்டு விழா
கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர்
கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 27ஆம் ஆண்டு விழாவில் பேசிய தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங்,
பெண்கள் வலைதளம்,
முகநூல், வாட்ஸ் அப் போன்றவற்றை பயன்படுத்தும் போது கவனத்துடன்
செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இவ்விழாவுக்கு சீதக்காதி அறக்கட்டளைத்
தலைவர் ஆரிப்ரஹ்மான் தலைமை வகித்தார். செயலர் காலித் புஹாரி,
அறக்கட்டளை உறுப்பினர்கள் குர்ரத்ஜமீலா,ஷாபிஹாஹாலித், ஆய்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுமையா
ஆண்டறிக்கை வாசித்தார்.
விழாவில் துபை மண்டல முன்னாள் மாணவிகள்
சங்கத் தலைவி பஜிலாஹசன் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினராக தென்மண்டல
ஐ.ஜி. அபய்குமார்சிங் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை
வழங்கி பேசியது:
உழைப்பாளிகளால் மட்டும் தான் வெற்றியை
எட்ட முடியும். பெண்கள் சமூக ஊடகங்களில் தொழில் நுட்ப வளர்ச்சியான,
ஈ மெயில், முகநூல், வாட்ஸ் அப் இவற்றை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன்
செயல்பட வேண்டும். தவறாக அனுப்பப்படும் வதந்திகளை நம்பி அதை பரப்பக் கூடாது. அது
தண்டனைக்குரிய குற்றம். 18 வயதில் இருக்கும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும். உங்களுக்கு தவறான குறுஞ்செய்திகள் வந்தால் 1091
என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஹலோ
போலீஸில் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும. அது பாதுகாப்பாகவும்,
ரகசியமாகவும் வைக்கப்படும் என்று அவர்
பேசினார்.
மேலும் விழாவில் முன்னாள் சட்டப் பேரவை
உறுப்பினர் ஹசன்அலி, யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல்காதர்,
சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர்
சேக்தாவூத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவிகள் சங்கத் தலைவி ரபியத்
நுஸ்ரா நன்றி கூறினார்.
செய்தி: தினமணி
No comments :
Post a Comment