(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 19, 2015

அஞ்சல் நிலையங்களில் பாரத் மொபைல் விற்பனை மார்ச் 31 ஆம் தேதி நிறைவடைகிறது

No comments :
அஞ்சல் நிலையங்களில் ரூ. 1,999 மதிப்புள்ள பாரத் மொபைல் விற்பனை இம்மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது என, ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல்துறைக் கண்காணிப்பாளர் என்.ஜே. உதயசிங் கமுதியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது: அகில இந்திய அஞ்சல் துறை அமைச்சகம் உத்தரவில், தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்களில் பாரத் பென்டா மொபைல் என்ற செல்லிடப்பேசி விற்பனை நடைபெற்று வருகிறது.

அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த செல்லிடப்பேசி, மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி தலைமை அஞ்சல் நிலையங்களிலும் மற்றும் கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை, ராமேசுவரம் பகுதியிலுள்ள அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை மார்ச் 31 வரை மட்டுமே நடைபெறும்.

குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் நிலையங்களில் முதல் நாள் ரூ. 500 முன்பணம் செலுத்தி, மறுநாள் மீதப்பணம் செலுத்தி செல்லிடப்பேசியை பெற்றுக் கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

No comments :

Post a Comment