(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 19, 2015

அலெர்ட்-360 மொபைல்-ஆப் : ராமநாதபுரம் மாவட்ட போலீசில் அறிமுகம்!!

No comments :
சட்ட விரோத செயல்கள், பிரச்னைகளை பொதுமக்கள் தெரிவிக்க இந்தியாவிலேயே ராமநாதபுரம் மாவட்ட போலீசில் அலெர்ட்-360 அப்ளிகேஷன் சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சட்டவிரோத செயல்கள் குறித்து தெரிவிக்க ராமநாதபுரம் மாவட்ட போலீசில் ஹலோ போலீஸ்பொதுமக்கள் தகவல் மையம் துவங்கப்பட்டது. பொதுமக்கள் 24 மணி நேரமும் இந்த செல்போன் எண்ணில் பேசியோ, எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், இமெயிலில் தெரிவிக்கலாம் என எஸ்.பி., தெரிவித்தார்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா, மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், பொதுமக்கள் பிரச்னை, போலீசாரின் செயல்பாடுகள் குறித்தோ, ரவுடி மற்றும் பெண்களை கேலி செய்தல்(ஈவ்டீசிங்), விபத்து மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி, பொதுமக்களுக்கு தெரியவரும் தகவல்களை போலீசிற்கு தெரிவிக்க வசதியாக ஹலோ போலீஸ்தகவல் மையம் கடந்த டிசம்பர் 12ல் துவங்கப்பட்டது. இதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.   

பொதுமக்கள் 83000 31100 செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோ, எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்ப் மூலமாகவோ அல்லது   sஜீக்ஷீனீபீ.tஸீ@ஸீவீநீ.வீஸீ    என்ற இமெயில் முகவரியிலோ தெரிவிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு போலீசிலும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு அரை மணி நேரத்திற்குள் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடவடிக்கை குறித்து புகார் தெரிவித்தவருக்கும் பதில் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

இதுபோன்ற புகார்களை தெரிவிக்க தற்போது நவீன சாப்ட்வேர் வசதியை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. அலெர்ட்-360 (கிலிணிஸிஜி  360) என்ற அப்ளிகேஷன் சாப்ட்வேரை கூகுள் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த அப்ளிகேஷன் ராமநாதபுரம் மாவட்ட கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சாப்ட்வேர் வசதியுள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த முடியும். அடுத்ததாக ஆப்பிள் சாப்ட்வேர்களிலும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் கால் செய்தால் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும், கால் செய்பவர்(புகார் செய்பவர்) எங்கிருந்து செய்கிறார் என்பது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் திரையில் தெரியும். அதன் மூலம் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் தெரிவித்து எளிதில் நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் போலீஸ் அதிகாரிகள், போலீஸ் ஸ்டேஷன்கள் குரூப்பில் கொண்டு வரப்பட்டு அலெர்ட் செய்யப்படும். அலெர்ட்-360 வைத்திருப்பவர்களும் எமர்ஜென்சி அலெர்ட் குரூப் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த குரூப்பில் உள்ளவர்களுக்கும் உடனடியாக புகார் அலெர்ட்டுகள் கிடைக்கும். சம்பவ இடத்திலிருந்து போட்டோ, வீடியோக்களையும் எடுத்து அனுப்பலாம். இந்த அப்ளிகேஷன் ஹலோ போலீஸ் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

போலீசார் எளிதில் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்கள் சம்பவ இட தகவல் தெரியவில்லை என்றால் கூட அங்கிருந்து கால் செய்தால் போதும், போலீசார் சம்பவ இடத்தை தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்த அப்ளிகேஷன் நேற்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வசதியை நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., மயில்வாகனன் தொடங்கி வைத்தார். கமுதி ஏஎஸ்பி சேகர் தேஷ்முக், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெள்ளையப்பன், பிரண்ட்ஸ் டூ சப்போர்ட் ரத்ததான ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினகரன்No comments :

Post a Comment