(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, March 9, 2015

பன்றிக் காய்ச்சல் - தடுக்கும் வழிமுறைகள்

No comments :
பன்றிக்காய்ச்சல் நோய் தோன்றிய விதம் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் சுகாதார துறையினர் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதனை பார்க்கலாம்.

உலகையே அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல், 1920–ம் ஆண்டில் பன்றிகளிடம் காணப்பட்டது. ஆரம்பத்தில் பன்றிகளிடமிருந்து பன்றிகளுக்கு இந்த காய்ச்சல் பரவியது. பின்னர் நாளடைவில் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவத்தொடங்கியது.

 அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவி வருகிறது. இதனாலேயே இக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்பட்டது.

 தற்போது இந்த நோய் பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதில்லை. ‘‘எச்–1 என்–1’’ என்ற வைரஸ் கிருமி மூலமாகவே மனிதர்களிடமிருந்தே மனிதர்களுக்கு பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலமாகவே வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது.

இக்கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேஜை, குளிர்சாதன
பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும் போது, அக்கிருமிகள் நம் கையில் ஒட்டிக்கொள்கின்றன. இதன் மூலமும் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது.

 இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் 2 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரம் தாக்குப்பிடிக்கும்.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம், சளியில் ரத்தம் வருதல், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் ஆகியவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

o   வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்புபவர்கள் சோப்பு போட்டு கை, கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் நல்லது. கைகளை கழுவாமல், மூக்கு, வாய் மற்றும் கண்களை தொடக்கூடாது.
o   காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களிடமிருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டே விலகி இருக்க வேண்டும். அவர்களுடன் கைகுலுக்கி பேசக்கூடாது.
o   வீட்டில் உள்ள பொருட்களை தினமும் கிருமி நாசினிகளை கொண்டு சுத்தமாக துடைக்க வேண்டும். தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க்அணிந்து செல்ல வேண்டும்.
o   பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், துணியால் நன்றாக மூக்கையும், வாயையும் பொத்திக்கொள்ள வேண்டும். முடிந்தவரை பொது இடங்களுக்கு செல்வதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.
o   கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளாததால் தான் 80 சதவீதம் பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோப்பு போட்டு கைகளை கழுவுவதற்கு 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
o   முதலில் கைகளை தண்ணீரில் நன்றாக நனைத்து விட்டு சோப்பு போட்டு விரல் இடுக்குகளிலும் நன்றாக கழுவ வேண்டும்.

o   பன்றிக்காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 104 என்ற மருத்துவ உதவி சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

தகவல்: திரு. ஹிதாய்த்

No comments :

Post a Comment