(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 23, 2015

வரும் (சனி-ஞாயிறு) ஏப்ரல் 25-26 தேதிகளில், ராமநாதபுரத்தில் “பாஸ்போர்ட்” முகாம்!!

No comments :


ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்.25,26 ஆகிய தேதிகளில் பாஸ்போர்ட் முகாம் நடைபெறுகிறது.

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் பாஸ் போர்ட் சேவையை விரிவு படுத்தும் எண்ணத்தில் மாவட்டம் தோறும் பாஸ் போர்ட் முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறது.  இதன் அடிப்படையில் மதுரை மண்டல பாஸ் போர்ட் அலுவலம் வருகிற 25, 26ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு பாஸ் போர்ட் முகாம் நடத்த உள்ளது.


இதில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனின் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவின் போது பாஸ் போர்ட் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தில் Camp Location என்ற இடத்தில் ராமநாதபுரம் Camp என்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த முகாம் ராமநாதபுரம் மாவட்ட   மக்கள் மட்டுமே பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  வேறு மாவட்ட மக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது. முகாமில்     தட்கல், போலீஸ் தடையின்மை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள்    ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

முன்பதிவு பெற்ற விண்ணப்பதாரர்கள் முகாமிற்கு வரும் போது விண்ணப்ப பதிவேட்டில் உள்ள தேதி, நேரத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ARN Sheet, 2 பாஸ் போர்ட் போட்டோ. தேவையான அசல் சான்றிதழ்கள்    மற்றும் அதன் நகல்கள் கொண்டு வரவேண்டும். சான்றிதழ் விபரங்களை www.passportindia.gov.in இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.


இது த விர 25ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடை பெற உள்ளது. இதில் வெளிநாட்டுக்கு செல்ல பாஸ் போர்ட், விசா பெறும் முறை, அதில் உள்ள இடற்பாடுகள் குறித்த    சந்தேகங்கள் ஆகியவற்றை குறித்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் நந்தகுமார் கூறினார்.

No comments :

Post a Comment