(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 12, 2015

கீழக்கரையில் விபத்து!! வாலிபர் மரணம்!!

No comments :


கீழக்கரை அருகே வண்ணந்தாரவை E.B.அலுவலகம் அருகில் இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.


அவரை காவல்துறை உதவியுடன் கீழக்கரை த.மு.மு.க ஆம்புலன்சில் கொண்டு சென்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் யார் என்று விசாரித்ததில் கீழக்கரை கிழக்குதெருவைச் சேர்ந்த அபுபக்கர் அவர்களுடைய மகன் காஜா சர்புதீன் என்று தெரியவந்தது.

அவருடைய குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு காவல்துறை நடவடிக்கைகளை சரிசெய்து ஜானாஸவை பெற்று அன்னாரது குடும்பத்தில் ஒப்படைத்தனர் கீழக்கரை த.மு.மு.க வினர்.


செய்தி: திரு.ஃபவுஜ் அமீன், கீழக்கரை

No comments :

Post a Comment