Monday, April 20, 2015
மண்டபம் ஒன்றியம், புதுமடத்தில் புதிய “ட்ரான்ஸ்ஃபார்மர்”
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டபம் ஒன்றியம்,
புதுமடம் தெற்குத்தெருவில் சட்டமன்ற
உறுப்பினரின் பெரும் முயற்சியால் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது ! !
இதன் தொடக்கவிழாவுக்கு ஊராட்சி தலைவர் தர்வேஸ் தலைமை
தாங்கினார். இதில் மின்வாரிய என்ஜினீயர்கள் சின்னத்துரை,
யோகானந்தம்,
ஜோசப் செல்வராஜ்,பால்ராஜ்,ஒன்றிய குழு உறுப்பினர் கானிதா பானு,
பைத்துல்மால் தலைவர் அகமதுகனி,
ஜமாத் தலைவர் செய்யது முஸ்தபா,
வடக்குத்தெருஜமாத் அப்துல் காதர்,
முகம்மது முஸ்தபா உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
புதுமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மனிதநேய
மக்கள்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர்.முனைவர். M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களால் செய்யப்பட்ட மேம்பாட்டு பணிகள்:
புதுமடம் ஊராட்சி:
இந்து மயானம் சுற்றுசுவர் 8.10 லட்சம்
தெற்கு தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 5.00
வடக்கு தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 2.00
நடுத்தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 4.00
அரசு மேனிலை பள்ளி கழிப்பறை 2.00
அகஸ்தியர் கூட்டம் இந்து மயானம் 5.00
அம்மாபட்டினம் அங்கன்வாடி 8.00
தெற்கு தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 5.00
வடக்கு தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 2.00
நடுத்தெரு கபர்ஸ்தான் சுற்றுசுவர் 4.00
அரசு மேனிலை பள்ளி கழிப்பறை 2.00
அகஸ்தியர் கூட்டம் இந்து மயானம் 5.00
அம்மாபட்டினம் அங்கன்வாடி 8.00
மாநாங்குடி ஊராட்சி:
தரவையில் தரைப்பாலம் மற்றும் சாலை 14.00
தரவையில் தரைப்பாலம் மற்றும் சாலை 14.00
காரான் ஊராட்சி:
தலைதோப்பு கிராம அங்கன்வாடி 6.00
தலைதோப்பு கிராம அங்கன்வாடி 6.00
கும்பரம் ஊராட்சி:
அய்யப்புடா ஊரணி தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை 3.00
அய்யப்புடா ஊரணி தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை 3.00
கோரவள்ளி ஊராட்சி:
நிழற்குடை மற்றும் தரவை தடுப்புச்சுவர் 6.00
நிழற்குடை மற்றும் தரவை தடுப்புச்சுவர் 6.00
தாமரைக்குளம் ஊராட்சி:
ஆதி திராவிடர் மயானம் 4.00
அரசு உயர்நிலை பள்ளியில் சிமின்ட் சாலை 3.00
நியாயவிலைக் கடை 8.00
ஆதி திராவிடர் மயானம் 4.00
அரசு உயர்நிலை பள்ளியில் சிமின்ட் சாலை 3.00
நியாயவிலைக் கடை 8.00
என்மனம் கொண்டான் ஊராட்சி:
உச்சிபுளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சு.ழு. 2.35
உச்சிபுளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சு.ழு. 2.35
மொத்தம் ரூ.77.85 லட்சங்கள்
இவை தவிர
உச்சிபுளி - புதுமடம் சாலை 2011 ம் ஆண்டு பெய்த மழையில் முற்றிலும் சேதமானபோது
சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து வெள்ள நிவாரண நிதியில் ரூ.ஐந்து லட்சம் செலவில்
சாலை செப்பனிடப்பட்டது.
2013
ம் ஆண்டு முழுவதுமாக சாலையை மேம்பாடு
செய்திட அமைச்சரிடமும், சட்டமன்றத்திலும் கோரிக்கை வைத்து ரூ.77
லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டது.
தெற்கு தெரு பகுதியில் நிலவிய குறைந்த மின் விநியோகம்
பிரச்சினை சரி செய்திட மின்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு
புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அமைச்சரிடம்
முறையிட்டு அப்புறப்படுத்தப் பட்டது.
கொப்பரை தேங்காய்க்கு நியாயமான விலை கொடுக்க வேண்டும் என
சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதால் ரூ.35 என இருந்த தேங்காய் விலை ரூ.50 என உயர்த்தப்பட்டது.
புதுமடம் தெற்கு கடல் பகுதியில் நிலவும் கடல் அரிப்பு
பிரச்சினை குறித்து எழுப்பப்பட்ட கோரிக்கை காரணமாக கடல் அரிப்பு தடுப்புச்சுவர்
அமைத்திட நிபுணர் குழு மூலம் அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
உச்சிபுளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர்
நியமிக்கப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் வாய்த்த கோரிக்கை காரணமாக அங்கு பெண்
மருத்துவர் நியமிக்கபட்டுள்ளார்.
பழுதடைந்த என்மனம்கொண்டான் துவக்கப்பள்ளி குறித்து கோரிக்கை
வைத்ததால் அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்னை விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க வழி செய்ய
வேண்டும் என வாய்த்த கோரிக்கையை அடுத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியம்
வழங்க அறிவிப்பு செய்துள்ளது.
புதுமடத்தில் அரசு மகளிர் மேனிலை பள்ளி அமைக்க வேண்டும் என
சட்டமன்றத்திலும், பள்ளிக்கல்வி அமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அரியமான் பீச் செல்லும் சாலை மற்றும் பாலம் பழுது குறித்து
சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதால் ஆட்சியர் ரூ.11.10
லட்சம் ஒதுக்கி மேம்பாடு
செய்யப்பட்டுள்ளது.
மேலும்
புதுமடம் புதிய மின்மாற்றி சம்பந்தமாக ராமநாதபுரம் சட்டமன்ற
உறுப்பினர் அவர்கள் மின்சாரத்துறை அமைச்சருக்கு அனுப்பிய கடிதம் : -
-----------------------------------------------------------------------------------------------------------------
பெறுநர்
மாண்புமிகு நத்தம் ஆர்.விசுவநாதன் அவர்கள்
எரிசக்தி துறை அமைச்சர்
சென்னை.
பெறுநர்
மாண்புமிகு நத்தம் ஆர்.விசுவநாதன் அவர்கள்
எரிசக்தி துறை அமைச்சர்
சென்னை.
பொருள்: புதுமடம் ஊராட்சி - கூடுதல் மின்மாற்றி
ஏற்படுத்துதல் தொடர்பாக
பார்வை: புதுமடம் ஊராட்சி தலைவரின் கோரிக்கை மனு
ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட புதுமடம் ஊராட்சி பகுதியில்
மின் விநியோகம் பற்றாக்குறையாக உள்ளதாகவும் இதனால் இரவு நேரங்களில் தெருவிளக்குகள்
உட்பட விளக்குகள் சரியாக எரிவதில்லை என்றும் பாhர்வையில் கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான
தேவைகள் முடிந்த பின் அதாவது இரவு 10 மணிக்கு பிறகுதான் விளக்குகள் எரிகின்றன என்றும் மனுவில்
கூறப்பட்டுள்ளது.
எனவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் புதுமடம் ஊராட்சியின்
கிழக்குப் பகுதியில் புதிதாக கூடுதல் மின்மாற்றி அமைத்து பகுதி மக்களின்
மின்குறையை போக்கிட ஆவணச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இவ்வாறு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்தும் அனுப்பிய கடிதத்தை
தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்ததின் அடிப்படையில் தற்போது
பொதுமக்களுக்கு பெரிதும் சிரமத்தை ஏற்படுத்தி வந்த பெரும் பிரச்சனை ஒரு முடிவுக்கு
வந்தது பொதுமக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
செய்தி: இராமநாதபுரம் MLA அலுவலகம்
No comments :
Post a Comment