(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, April 29, 2015

கீழக்கரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு வரைவுப் பட்டியல்!!

No comments :
கீழக்கரையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு வரைவுப் பட்டியலில் திருத்தங்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகராட்சி ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கீழக்கரை நகராட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பில் பெறப்பட்ட விவரங்கள் அடங்கிய வரைவுப்பட்டியல் புதன்கிழமை முதல் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

படிவம் அ வில் வரைவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தகவலுக்கு எதிராக தாக்கல் செய்வதற்கும், படிவம் -ஆ வில் திருத்தங்கள் மாறுதல் செய்வதற்கும், படிவம் இ மூலம் கணக்கில் விடுபட்ட குடும்பங்கள் சேர்ப்பதற்கும் முகவரி மாற்றம் செய்வதற்காகவும் விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்களை மே மாதம் 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரில் தாக்கல் செய்யலாம். மேற்கண்ட பட்டியல் மீது ஆட்சேபணை, கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் ஜூன் 17-இல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.


No comments :

Post a Comment