(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 24, 2015

கீழக்கரையில் இன்று (24-5-2015) அம்மா உணவகம் திறப்பு!!

No comments :
தமிழகம் முழுவதும் கட்டி முடித்து திறப்பு விழாவுக்காக காத்துக் கிடக்கும் 150 அம்மா உணவகங்கள் மற்றும் அம்மா இலவச மருந்தகங்களை இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதற்கு ஏழைத் தொழிலாளர்கள்கூலித் தொழிலாளர்கள்வேலைக்குச் செல்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கீழக்கரையில் திறக்கப்பட்ட அம்மா உணவக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். நகர்மன்றத்தலைவி திருமதி. ராபியத்துல் காதிரிய்யா மற்றும் பலர் முன்நின்று நிகழ்ச்சியை சிறப்ப்புற நடத்தினர். 

சென்னையில் மட்டும் 50 அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. அதேபோல காஞ்சிபுரத்தில் 13 உணவகங்கள் திறக்கப்பட்டன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த அம்மா உணவகம். அம்மா திட்ட வரிசையில் முதல் திட்டம் இந்த அம்மா உணவகம்தான்.

படங்கள்: திரு. சுரேஷ் ராஜேந்திரன்
கீழக்கரை
No comments :

Post a Comment