(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, May 10, 2015

பிளஸ் 2 வில் குறைந்த மதிப்பெண். ராமநாதபுரம் அருகே மாணவி தற்கொலை!!

No comments :
ராமநாதபுரம் அருகே பிளஸ் 2 மாணவி சனிக்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மகள் வினோதினி (18). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில் இவர் 774 மதிப்பெண்கள் பெற்றிருந்தாராம்.


இவருடன் படித்த சக மாணவிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றிருந்ததால் மனமுடைந்த வினோதினி வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment