(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, May 21, 2015

10ம் வகுப்பு தேர்வில் ராமநாதபுரம் மாவட்ட மாணவி நித்யஸ்ரீ -யும் மாநில அளவில் முதலிடம்!!

No comments :


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 41 மாணவ- மாணவிகள் 500க்கு 499 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதனை மாணவ- மாணவிகளின் விவரம்:
--------------------------------------------------------------------------------
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி நித்யஸ்ரீ, மதுரை மாவட்டம், தி.கல்லுப்பட்டி வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி மாணவி சசிகலா, நெல்லை மாவட்டம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி மாணவி முத்துவேணி, பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

சென்னை சேலையூர் சியான் பள்ளி மாணவி ஜேஸ்லின், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சாமி மெட்ரிக் பள்ளி மாணவி தேவதர்ஷினி, கோவை மாவட்டம், காரமடை வித்யா விகாஸ் பள்ளி மாணவி கே.எஸ்.கிருத்திகா ஆகியோரும் முதலிடம் பிடித்துள்ளனர்.

சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அபியாஜோஷ், அனுலன்ஷனா, சூரப்பேட்டை வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி அனுகீர்த்தனா, அம்பத்தூர் சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி, பொன்னேரி ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவி அபிஷ்மா ஆகியோரும் முதலிடம் பிடித்துள்ளனர்.

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் கார்த்திக் அருண், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளி மாணவி ஜெயஸ்டி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

புதுச்சேரியில் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி மாணவி முத்தாள், சேலம் அரசுப் பள்ளி மாணவி ஜெயநந்தனா, அரியலூர் பரணம் பள்ளி மாணவி பாரதிராஜா, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் பள்ளி மாணவி வைஷ்ணவி ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

நன்றி: விகடன்

No comments :

Post a Comment