(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 30, 2015

சவூதி வாழ் இந்திய தொழிலாளர்களின் கவனத்திற்கு!

No comments :



சவூதி வாழ் இந்திய தொழிலாளர்களின் கவனத்திற்கு!
எனதருமை சவூதி வாழ் தொழிலாளர் சொந்தங்களே,நாம் பல்வேறு தேவைகளை முன்னிறுத்தி நமது தாய்,தந்தை,மனைவி,பிள்ளைகள்,உறவுகளை பிரிந்து உழைக்க வந்துள்ளோம்.
நம்மை சுற்றி ஒருசில நேரத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதுண்டு.அது நமக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.
ஆனாலும் நம்மில் சிலபேர் அதை பற்றியே பெரிய அளவில் உடனிருப்போரிடமும்,அலைபேசி வாயிலாக தமது குடும்பத்தாருடனும் விவாதிப்பதுண்டு.

சிலநேரத்தில் இதுவே நமக்கு எதிராகவும் திரும்பிவிடும்.அதனால் நமது நிம்மதி சீர்குலைந்து தேவையற்ற பிரச்சினைகளை சுமக்க நேரிடும்.
நமது உறவுகளை தவிர்த்து வேறு யாரிடமும் நமது செல்போனை கொடுத்துவிடக் கூடாது.
யாராவது ஒருவர் நமது செல்போனில் மிஸ்டுகால் கொடுக்க சொல்லியோ,ஒரு SMS அனுப்ப சொல்லியோ போன் கேட்டால் கொடுத்து அபாயகரமான சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்.
சவூதியை சுற்றியுள்ள ஒருசில நாடுகளில் விரும்பத்தகாத உள்நாட்டு கலவரம் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் யாராவது ஒருவர் நமது செல்போன் மூலம் சவூதி அரசுக்கு எதிரான வார்த்தைகளை உரையாடல் மூலமோ அல்லது SMS மூலமோ பரப்பி விட்டால் அதன் பாதகமான முடிவுகள் யார் பெயரில் சிம் கார்டு உள்ளதோ அவர்களையே சேரும்.
இதே போன்றுதான் பேஸ்புக்,வாட்ஸப் போன்றவையும்.நமது செல்போனிலிருந்து ஏதேனும் ஒரு சட்டவிரோத தகவலை மற்றவருக்கு அனுப்பிவிட்டாலும் அதற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும்.
நமது செல்போன் தொலைந்து விட்டாலோ?அல்லது யாரேனும் களவாடி விட்டாலோ?சிறிதும் தாமதமின்றி அருகில் உள்ள சிம்கார்டு நிறுவனத்தில் புகார் அளித்து அதன் செயல்பாட்டை முடக்கி விடவேண்டும்.
வளைகுடாவில் பாதிக்கப்பட்ட ஒருவரின் அழுகுரலிலிருந்து கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

இறைவன் நம் அனைவரையும் இதுபோன்ற இக்கட்டிலிருந்து பாதுகாப்பானாக ஆமீன்.

தகவல்:கீழை ஜஹாங்கீர் அரூஸி


No comments :

Post a Comment