(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 12, 2015

கீழக்கரை உள்ளிட்ட ராமநாதபுர மாவட்ட ஊர்களில் ஜெயலலிதா விடுதலை கொண்டாட்டங்கள்!!

No comments :
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரண்மனை முன்பும், வண்டிக்காரத் தெரு, புதிய பேருந்து நிலையம், பாரதி நகர், கேணிக்கரை ஆகிய இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் அரண்மனை முன்பிருந்து மணிக்கூண்டு, பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்டச் செயலர் ஜி.முனியசாமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.சி.வரதன், எம்.ஜி.ஆர். மன்ற செயலர் செல்வம், நகர் மன்ற உறுப்பினர்கள் தனசேகரன், வீரபாண்டி, வாசுகி, ஒன்றியச் செயலர் அசோக்குமார், நகர் செயலர் எஸ்.அங்குச்சாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை:
கீழக்கரை நகர் தலைவி திருமதி. ராபியத்துக் காதிரிய்யா தலைமையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.பரமக்குடி:
பரமக்குடி பேருந்து நிலையம் முன் நகர்மன்ற தலைவர் கீர்த்திகா முனியசாமி தலைமையில், மாவட்ட அதிமுக சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் கே.அப்துல்மாலிக், நகர்மன்ற துணைத் தலைவர் டி.என்.ஜெய்சங்கர், ஆ.பாலுச்சாமி, நாகராஜன் உள்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பின்பு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஐந்து முனை சந்திப்பு, ஓட்டப்பாலம், ஆற்றுப்பாலம், நகராட்சி ஆகிய பகுதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் ஐ.சுதந்திராகாந்தி இருளாண்டி, உடை. எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெ. பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், கவுன்சிலர்கள் தூரி மாடசாமி, செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சேதுபதி, விவசாய அணி இணைச் செயலர் வி.கருப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கடலாடி:
கடலாடி ஒன்றிய அதிமுக செயலர் கே.முனியசாமி பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு துணைத் தலைவர் பத்மநாதன், ஒன்றிய அவைத் தலைவர் வேலுச்சாமி, இலக்கிய அணி மாவட்டச் செயலர் திலகர், மேலச்சிறுபோது கூட்டுறவு சங்கத் தலைவர் ரபீக், ஒன்றிய பேரவைச் செயலர் நீதிதேவன், நகரச் செயலர் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

சாயல்குடி:
சாயல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் வீ.மூக்கையா தலைமையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாடினர். இதில் ஒன்றியச் செயலர் அந்தோனிராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் எம்.செய்யது காதர், ஒன்றிய துணைச் செயலர் வி.கே.செந்தூர்பாண்டி, நகர செயலர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் அதிமுக தொண்டர்கள் நகர் மன்றத் தலைவர் அர்ச்சுனன் மற்றும் நகர் செயலர் பெருமாள் தலைமையில் பட்டாசு வெடித்து, கோயில் முன் தேங்காய் உடைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் அதிமுக நகர் ஜெ. பேரவை செயலர் கஜேந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் நாகசாமி, மீனாட்சி, அண்ணா தொழிற் சங்க மின்சார பிரிவு கோட்டச் செயலர் முருகேசன், கோயில் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் அண்ணாதுரை மற்றும் செயலர் ராதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினமணி மற்றும் கீழக்கரை நண்பர்கள்


No comments :

Post a Comment