(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, May 9, 2015

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு நிலத்தை தானமாக வழங்கினார் தொழிலதிபர் செய்யது சலாஹூதீன்!!

No comments :
கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் தனது மூன்று ஏக்கர் நிலத்தை தானமாக வியாழக்கிழமை வழங்கினார்.

கீழக்கரையை தனி வட்டமாக அறிவித்து சிலமாதங்களுக்கு முன்பு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் வட்டாட்சியர்  அலுவலகம் தற்காலிகமாக தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. முதல் வட்டாட்சியராக கமலாபாய் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.

நிரந்தரமாக வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு வருவாய்த்துறையினர் இடங்களைத் தேடினர். இந்த அலுவலகம் கட்டுவதற்கு போதுமான அரசு இடங்கள் ஏதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், கீழக்கரை-ராமநாதபுரம் சாலையில் துணை மின்நிலையம் அருகே உள்ள தனக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாகத் தருவதற்கு கீழக்கரை தொழிலதிபர் செய்யது சலாஹூதீன் முன்வந்தார். 


இதனை அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், வட்டாட்சியர் கமலாபாய் முன்னிலையில்  அவர், வட்டாட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு தனது இடத்தை தானமாக வருவாய்த்துறையினரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர் ராவியத்துல் கதரியா மற்றும் கவுன்சிலர்கள், வருவாய்த்துறை அலுவலர் தமீம்ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.


No comments :

Post a Comment