(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 10, 2015

ஏர் இந்தியா விமானத்தில் ரூ.1,777-க்கு பறக்கலாம்: முன்பதிவு ஆரம்பம்!

No comments :
ஏர் இந்தியா விமானத்தில் ரூ.1,777-க்கு பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு ஆரம்பம் ஆகிறது.


ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டிலும்ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிலும் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் விமான நிறுவனங்கள் சலுகை விலையை அறிவிக்கின்றன. கடந்த வாரத்தில்ஜெட் ஏர்வேஸ்ஸ்பைஸ் ஜெட்இண்டிகோ மற்றும் ஏர் ஏசியா விமான நிறுவனங்கள் சலுகை விற்பனையை அறிவித்து இருந்தன.இந்நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம் குறிப்பிட்ட காலங்களுக்கு பருவகால சலுகை விற்பனை அறிவித்துள்ளது. அதன்படி, ஏர் இந்தியா விமானங்களில் உள்நாட்டிற்குள் பயணம் செய்ய, இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு, அதாவது 12 ஆம் தேதி வரை விமான பயண டிக்கெட்டுகளை 1,777 ரூபாய்க்கு சலுகை விலையில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை ஏர் இந்தியாவின் இணையதளம் வழியாகவும், அங்கீகரிக்கப்பட்ட பயண ஏற்பாட்டாளர்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பருவகால சலுகையில் பயணம் செய்ய முன்பதிவு செய்பவர்கள் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை பயணம் செய்யலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

செய்தி: விக்டன்


No comments :

Post a Comment