(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, June 24, 2015

இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 3!!

No comments :
இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பதவி முதல் மேல்நிலை அதிகாரி வரையில் பல்வேறு விதமான பணிகளுக்குப் போட்டித்தேர்வு நடத்திப் பணியாளர்களைத் தேர்வுசெய்துகொள்கிறது. அந்த வகையில், தற்போது 504 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


உதவியாளர் பணி:

உதவியாளர் பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால் போதும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள் எனில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. வயது வரம்பு 18 முதல் 28 வரை. எனினும், எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரையிலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் இதர வங்கித்தேர்வுகளைப் போன்று, ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, கணிதத்திறன், கம்ப்யூட்டர் ஆகிய 5 பகுதிகளில் இருந்து அப்டெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 40 வினாக்கள் வீதம் 5 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கு மதிப்பெண்கள் 200. ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம்.

தவறான பதில்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. எனவே, தெரியாத கேள்விகளுக்கு விடையளிக்காமல் விட்டுவிடுவதே நல்லது.

கடைசித் தேதி:

உரிய கல்வித்தகுதியும், வயது வரம்புத் தகுதியும் உடைய பட்டதாரிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) சென்று ஆன்லைன் மூலமாக ஜூலை 3-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் வழியிலான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. தேர்வு முடிவும் அந்த மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டு விடும். உதவியாளர் பணிக்கு மாதச் சம்பளம் ரூ.25 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும்.

பணியில் சேர்ந்த பிறகு பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகள் எழுதி மேல்பணிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.



No comments :

Post a Comment