(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 6, 2015

ராமநாதபுரத்தில் நாளை (ஜூன் 7) அன்று மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு!!

No comments :தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கே.டி.பிரபாகரன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் மாவட்டங்களுக்கு இடையேயான 16 முதல் 23 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அணித் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.


 16 வயது முதல் 23 வயதுக்குள்பட்டோர் அதற்குரிய வயதுச் சான்றிதழ்களுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் த.பிரபாகரன் செல்லிடப் பேசி எண்- 9842101314 அல்லது கிரிக்கெட் பயிற்சியாளர் மகேந்திரன் செல்லிடப் பேசி எண்- 9789515435 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment