(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 1, 2015

'சென்னை அமிர்தாவுடன்' எனக்கு சம்மந்தம் இல்லை”- நடிகை ராதிகா சரத்குமார்!!

No comments :
சென்னை அமிர்தா கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு, தொழில்ரீதியானது மட்டுமே என்பதால், கல்வி நிறுவனம் பற்றி விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை படிக்க சேருங்கள் என்று பெற்றோருக்கு நடிகை ராதிகா சரத்குமார் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

நடிகை ராதிகா சரத்குமார், நடித்த, சென்னை அமிர்தா கல்வி நிறுவன விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகிவருகின்றன. அந்த விளம்பரத்தில் குறிப்பிட்ட அந்த கல்வி நிறுவனத்தை மிகவும் உயர்த்தி பேசுவார் ராதிகா.

இந்நிலையில், உண்மையிலேயே, சென்னை அமிர்தா கேம்பஸ் எப்படி உள்ளது என்பது குறித்து சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கின. ராதிகாவுக்கு சமூகவலைத்தளவாசிகள் கண்டனத்தை தெரிவித்தனர். சிலரோ, அது ராதிகாவின் நிறுவனம்தான் என்று கிளப்பிவிட்டுவிட்டனர்.


இந்நிலையில், ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் தளத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டுகளில் கூறியுள்ளதாவது: நான் இனிமேலும், அமிர்தா விளம்பரத்தில் என்னை தொடர்புபடுத்திக்கொள்ள போவதில்லை. கல்வி நிறுவனத்தில் சேரப்போகும்போது, மாணவர்களும், அவர்களில் பெற்றோரும், அவர்களே விசாரித்துக் கொண்டு செல்லவும்.

அமிர்தா நிறுவனத்துடனான எனது தொடர்பு முற்றிலும், தொழில்முறை சார்ந்தது. நான் அந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் கிடையாது. அல்லது வேறு எந்த அதிகாரமும் கிடையாது. இவ்வாறு தனது டிவிட்டுகளில் கூறியுள்ளார். இந்த டிவிட்டுகளுக்கு ரிப்ளே செய்துள்ள அவரின் ஃபாலோவர்களில் பெரும்பாலானோர், விளம்பரங்களில் நடிக்கும் முன்பு அந்த நிறுவனம் குறித்த விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

செய்தி: இன் இண்டியா 

No comments :

Post a Comment