(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 16, 2015

ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் விபத்து. மூன்று நபர்கள் பலி!!

No comments :
ராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் திருப்புல்லாணி அருகில் ஆம்னி வேனும் ஆம்னி பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கீழக்கரை பிரபுக்கள் தெருவைச்சேர்ந்த திரு. செய்யது இப்ராஹீம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இவர்களது மகள் பலத்த காயமடைந்துள்ளார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார்.

ஆம்னி வேன் ஓட்டுனர் திரு.வினோத்குமாரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மாயாகுளத்தைச்சார்ந்தவர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


செய்தி: திரு.தாஹீர், கீழக்கரை


No comments :

Post a Comment