(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 29, 2015

சென்னையில் பி.இ. கலந்தாய்வு தொடங்கியது!

No comments :அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பி.இ. மாணவர் சேர்க்கை நேற்று(ஜூன் 28) கோலாகலமாகத் தொடங்கியது. நடப்புக் கல்வியாண்டுக்கான (2015-16) பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு அணணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது.முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரி இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அரசு ஒதுக்கீட்டுக்கு உரிய இடங்கள் 1.80 லட்சத்துக்கும் மேற்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்காக சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) முன்னதாகவே வெளிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தர வரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. முதல் நாளில் விளையாட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 29-ல் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் கவுன்சிலிங் முடிந்தவுடன் கல்லூரிகளில் உள்ள இடங்கள், பாட வாரியாகவும் கல்லூரி வாரியாகவும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும். பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 28-ஆம் தேதி நிறைவு செய்யப்படும்.


No comments :

Post a Comment