Monday, June 15, 2015
ராமநாதபுரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பெண்களுக்கான சிறப்பு ஓய்வறை!!
ராமநாதபுரம்
புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பெண்களுக்கான சிறப்பு ஓய்வறையை ரோட்டரி சங்க
ஆளுநர் எம்.அசோக் பத்மராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர்
கே.நானா என்ற நாகரெத்தினம் தலைமை வகித்தார். ரோட்டரி ஆளுநர்கள் (தேர்வு) நவமணி, டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, பட்டயத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, மாவட்ட பயிற்றுநர் ஆறுமுகப் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச்
செயலர் எம்.சரவணன் வரவேற்றார்.
ரோட்டரி சங்க
ஆளுநர் எம்.அசோக்பத்மராஜ் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில்
அமைக்கப்பட்ட பெண்களுக்கான சிறப்பு ஓய்வு அறையை (குழந்தைகளுக்கு தாய்மார்கள்
பாலூட்டும் அறை) திறந்து வைத்து அதற்கான சாவியை நகர்மன்றத் தலைவர்
எஸ்.கே.ஜி.எஸ்.சந்தானலெட்சுமியிடம் வழங்கினார். விழாவில் சங்க துணை ஆளுநர்
பி.முனியசாமி, நிர்வாகிகள் சோமு, ஜெ.சுகுமார், ஜெ.தினேஷ்பாபு, பார்த்தசாரதி, செங்குட்டுவன், சண்முகராஜேஸ்வரன், மாவட்டத் திட்டக் குழு உறுப்பினர்
கே.சி.வரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினசரி
No comments :
Post a Comment