(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 8, 2015

ராமநாதபுரம் அருகே பைக்குகள் மீது கார் மோதியதி விபத்து, ஒருவர் பலி!!

No comments :
ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் இரு பைக்குகள் மீது கார் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை ஒருவர் உயிரிழந்தார். முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே புல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் சதீஷ்குமார் (30)மற்றும் பணி ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி (58) ஆகிய இருவரும் ராமநாதபுரத்திலிருந்து அவர்களது சொந்த ஊரான புல்லங்குடிக்கு தனித் தனி பைக்குகளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் பேராவூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தொண்டியிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் இரு பைக்குகளின் மீதும் மோதியதாம்.

பலத்த காயம் அடைந்த இருவரும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.பணி ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான முனியசாமி கவலைக்கிடமான நிலையில் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


செய்தி: தினமணி

No comments :

Post a Comment