(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, July 5, 2015

கீழக்கரை நகர்மன்ற 20ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜினாமா!!

No comments :
கீழக்கரை நகர்மன்ற 20ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் ராஜினாமா செய்தார்.

கீழக்கரை நகர்மன்றக் கூட்டம் ஜூலை 2ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் 20ஆவது வார்டு உறுப்பினர் ஹாஜா நஜிமுதீன் (திமுக) தனது வார்டில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி நகர்மன்ற தலைவர் ராவியத்துல் கதரியாவிடம் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை கொடுத்தார். இந்நிலையில் அவரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக நகர்மன்ற தலைவர் சனிக்கிழமை அறிவித்தார்.

இது குறித்து ஹாஜா நஜிமுதீன் கூறியதாவது: எனது வார்டில் உள்ள மக்களின் பிரச்னைகள் குறித்து பலமுறை நகர்மன்ற கூட்டத்திலும், நேரடியாகவும் முறையிட்டு வந்துள்ளேன். கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன் என்றார். 

நகர்மன்றத் தலைவி ராவியத்துல் கதரியா கூறுகையில், வெள்ளிக்கிழமை உறுப்பினரின் ராஜினாமா கடிதம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசின் ஒப்புதலின்படி அவரது கடிதம் ஏற்கப்பட்டு விட்டது என்றார்.No comments :

Post a Comment